குழந்தைகளுக்கான பயண விதிகளில் மாற்றமில்லை: இந்திய ரயில்வே

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி : 'ரயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கான டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம் ஏதும் இல்லை' என, இந்திய ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.ரயில்வே அமைச்சகத்தின் மார்ச் 6, 2020 தேதியிட்ட அறிக்கையின்படி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரயிலில் இலவசமாகப் பயணிக்கலாம். இந்நிலையில், 5 வயதுக்குட்ட குழந்தைகளுக்கும் ரயில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமீபத்தில் செய்தி வெளியானது.
Indian Railways, IRCTC, children, Train

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : 'ரயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கான டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம் ஏதும் இல்லை' என, இந்திய ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.

ரயில்வே அமைச்சகத்தின் மார்ச் 6, 2020 தேதியிட்ட அறிக்கையின்படி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரயிலில் இலவசமாகப் பயணிக்கலாம். இந்நிலையில், 5 வயதுக்குட்ட குழந்தைகளுக்கும் ரயில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமீபத்தில் செய்தி வெளியானது.


latest tamil news


இது குறித்து ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வது தொடர்பான விதியை, இந்திய ரயில்வே மாற்றியுள்ளதாக சமீப காலமாக சில ஊடகங்களில் செய்திகள் வந்தன. அவற்றில் உண்மை இல்லை.

ரயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் இந்திய ரயில்வே எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. 5 வயது வரையிலானோர் ரயிலில் பயணிக்க டிக்கெட் எடுக்க தேவையில்லை. அதே சமயம், அவர்களுக்கு தனியாக 'பெர்த்' தேவைப்படும் பட்சத்தில், வயது வந்தோருக்கான முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
18-ஆக-202209:18:55 IST Report Abuse
duruvasar புரளிய கிளம்பி விடுவதில் தமிழக ஊடகங்கள் நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கிறது.
Rate this:
Cancel
Marcopolo - Chennai,இந்தியா
18-ஆக-202208:12:46 IST Report Abuse
Marcopolo ஏன் அதையும் விட்டுவைத்தார்கள். சாவடிப்பது என்று முடிவு செய்தபின் குழந்தைகளுக்கும் (ஒரு வயது) வரியை சேர்த்து போட வேண்டியதுதானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X