இது உங்கள் இடம்: மது குடிப்போருக்கு 'அட்வைஸ்' பண்ணுங்க!

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (105) | |
Advertisement
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:என்.நக்கீரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'போதைப் பொருட்கள் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க வேண்டும். 'அவற்றின் விற்பனைக்கும், கடத்தலுக்கும் துணை போவோருக்கு எதிராக, சர்வாதிகாரியாக
Tasmac, Stalin, MK Stalin, CM Stalin

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:

என்.நக்கீரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'போதைப் பொருட்கள் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க வேண்டும். 'அவற்றின் விற்பனைக்கும், கடத்தலுக்கும் துணை போவோருக்கு எதிராக, சர்வாதிகாரியாக மாறுவேன்' என்று எச்சரித்துள்ளார்.

இதேபோன்று தான் முன்னர், 'மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல், லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடும் மேயர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு எதிராக நடவடிக்கை பாயும்' என்று எச்சரித்தார். கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்கும் விஷயத்தில், காவல் துறை அதிகாரிகளே கடத்தல் பேர்வழிகளுடன் பேரம் பேசி, கணிசமாக பணம் பெறும் போது, அவற்றை எப்படி ஒழிக்க முடியும்? மேலும், குட்கா போன்ற போதைப் பொருட்களை வாங்கி சாப்பிடுவதால் மட்டுமே, மக்கள் நாசமாகின்றனரா...

'டாஸ்மாக்' கடைகளில் அரசு விற்பனை செய்யும் மதுவை குடித்து, குடல் அழுகி பரலோகம் போகின்றனரே... அதெல்லாம் முதல்வருக்கு தெரியவில்லையா? 'டாஸ்மாக்' கடைகளால், இளம் விதவைகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது என்று முதலைக் கண்ணீர் வடித்தாரே கனிமொழி. இதைத் தடுத்து நிறுத்த, முதல்வர் சர்வாதிகாரியாக மாற மாட்டேன் என்கிறாரே... அது மட்டும் எந்த வகையில் நியாயம்?


latest tamil newsகுட்கா போன்ற போதை வஸ்துகளை சாப்பிட்டு, பரலோகம் போகிறவர்கள் எண்ணிக்கையை விட, மது குடித்து பரலோகம் போகிறவர்கள் எண்ணிக்கை தான் ரொம்ப அதிகம். போதைப் பொருட்களை விற்பனை செய்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்வோம் என்கிறார் முதல்வர். அப்படியெனில், அவர்களுக்கு துணை போகும், உயர் போலீஸ் அதிகாரிகளின் சொத்துக்களும் பறிமுதலாகுமா?

அரசியல்வாதிகள் கொள்கை கூட்டணி வைத்து மக்களை ஏமாற்றுவது போல, காவல் துறை அதிகாரிகள் போதை வஸ்துக்கள் விற்பனை செய்வோருடன் கூட்டணி வைத்து செயல்படுகின்றனர். இதன் வாயிலாக, லட்சக்கணக்கில் வருமானம் காவல் துறை அதிகாரிகளுக்கு கிடைக்கிறது. அதனால், முதல்வரின் எச்சரிக்கையை அவர்கள் சீரியசாக எடுத்துக் கொள்வரா என்பது சந்தேகமே. உள்ளாட்சி பிரதிநிதிகள் லஞ்ச ஊழலில் ஈடுபட்டால் நடவடிக்கை பாயும் என்றார் முதல்வர். ஆனால், உள்ளாட்சி பெண் கவுன்சிலர்களின் கணவர்கள், மக்களை மிரட்டி, 'கட்டிங்' வாங்குகின்றனரே...

அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களை திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லும் முதல்வர், மது குடித்து உடல்நலத்தை கெடுத்துக் கொள்ளும் 'குடி'மகன்களிடம், 'தயவு செய்து டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மது வாங்கி குடிக்காதீர்கள்' என்று, 'அட்வைஸ்' செய்ய வேண்டும். முதலில் இதைச் செய்ய முன்வருவாரா ஸ்டாலின்?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
18-ஆக-202217:57:02 IST Report Abuse
Ramesh Sargam சர்வாதிகாரியாக மாறுவேன் என்று வாய் கிழிய பேசினால் மட்டும் போதாது. ஏன் இப்பொழுதே மாறி இருக்கவேண்டும். இப்பொழுது மட்டும் போதைப்பொருள் விற்பனை, கடத்தல் நடக்கவில்லையா? ஆமாம் எனக்கு ஒன்று புரியவில்லை. இந்த கஞ்சா, குட்கா போன்ற பொருட்கள் மட்டும்தான் போதை தருமா? டாஸ்மாக் சரக்கு அடித்து, போதை ஏறி தெருவில் படுத்து உருளும் மக்களை நம் 'சர்வாதிகாரி' முதல்வர் பார்த்ததே இல்லையா? ஏன் டாஸ்மாக் கடைகளை மூடக்கூடாது? டாஸ்மாக் சரக்கு என்ன Boost, Bournvita, Horlicks, Ensure போன்ற சக்தி தரும் பானங்களா...?
Rate this:
கஜகரன் - NOIDA ,Brahmaputra Market,இந்தியா
18-ஆக-202220:30:15 IST Report Abuse
கஜகரன் .......
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
18-ஆக-202216:15:19 IST Report Abuse
Tamilnesan நீ சொல்லிட்டே.........ஹா....ஹா....
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
18-ஆக-202215:25:48 IST Report Abuse
Soumya புரூடா விடியல் ஐயா உங்க பார்ட்னர் குருமா தானே சரக்கும் மிடுக்குமா இருந்தா தா பொண்ணுங்க பார்ப்பாங்கன்னு சொன்னாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X