தன்னை கடித்த பாம்பை கடித்து துப்பிய 2 வயது சிறுமி!

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
அங்கரா : துருக்கியில், தன்னை கடித்த பாம்பை 2 வயது சிறுமி கடித்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்காசிய நாடான துருக்கியின் பிங்கோல் அருகே கண்டூர் என்ற கிராமத்தில் வசிக்கும் 2 வயது சிறுமி, வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது ஒரு பாம்பு அவளது உதட்டை கடித்தது. பதிலுக்கு சிறுமியும் அந்தப் பாம்பை பிடித்து கடிக்கத்
Brave girl, kills, snake

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அங்கரா : துருக்கியில், தன்னை கடித்த பாம்பை 2 வயது சிறுமி கடித்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்காசிய நாடான துருக்கியின் பிங்கோல் அருகே கண்டூர் என்ற கிராமத்தில் வசிக்கும் 2 வயது சிறுமி, வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது ஒரு பாம்பு அவளது உதட்டை கடித்தது. பதிலுக்கு சிறுமியும் அந்தப் பாம்பை பிடித்து கடிக்கத் துவங்கினாள். அந்தப் பாம்பு சிறுமியிடம் இருந்து தப்பிக்க போராடியது. ஆனால், அவள் விடவில்லை. அந்தப் பாம்பை மடக்கிப் பிடித்து கடித்து துப்பி விட்டாள். பாம்பு அதே இடத்தில் உயிரிழந்தது.


latest tamil news



சற்று நேரத்தில் வீட்டின் பின்பக்கம் வந்த குடும்பத்தினர், சிறுமி வாயில் ரத்தத்துடனும், அருகில் பாம்பு இறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.உடனே மருத்துவமனைக்கு சிறுமியை துாக்கிச் சென்றனர். அங்கு, அந்தச் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுமியை கடித்த பாம்பு விஷமற்றது என்பதால், உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
18-ஆக-202217:45:07 IST Report Abuse
NicoleThomson அந்த குழந்தை அவ்வளவு தூரம் செய்து கொண்டிருக்கையில் தாய் என்ன செய்து கொண்டிருந்தாள்? நம்மூரில் போர் வேல் அருகே விளையாடவிட்டு ஊடகத்தை கலக்கிய தாயை விட இந்த தாய் சீக்கிரம் மருத்துவமனைக்கு தூக்கி சென்றதை பாராட்டியே ஆகவேண்டும்
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
18-ஆக-202212:39:40 IST Report Abuse
jayvee குழந்தை பிறந்த நாடு அப்படி .. நான் வெடிகுண்டை சொல்லவில்லை
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
18-ஆக-202212:34:34 IST Report Abuse
Manguni வெடிகுண்டுகளைக் கடித்து வீசுவதற்கு நல்ல practice. என்று ஒரு மல மாடு சொல்லியிருக்கிறது கமெண்ட் இல்.. கேடு கேட்ட வாசகன். பாம்பு கடித்து சாவான். குழந்தை கண்ணனாம் பேர்.. சீ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X