பதவியை ராஜினாமா செய்தார் ஆசாத்: காங்கிரஸ் கட்சியில் முற்றுகிறது மோதல்

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் காங்கிரஸ் தேர்தல் குழுவின் தலைவராக கட்சி மேலிடத்தால் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே, அந்த பதவியை ராஜினாமா செய்தார், குலாம்நபி ஆசாத். இதனால், காங்கிரசில் கோஷ்டி பூசல் முற்றியுள்ளது.'காங்கிரசுக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும். கட்சியில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்' என, குலாம்நபி ஆசாத் உட்பட, கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர்,
Ghulam Nabi Azad, Congress

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் காங்கிரஸ் தேர்தல் குழுவின் தலைவராக கட்சி மேலிடத்தால் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே, அந்த பதவியை ராஜினாமா செய்தார், குலாம்நபி ஆசாத். இதனால், காங்கிரசில் கோஷ்டி பூசல் முற்றியுள்ளது.

'காங்கிரசுக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும். கட்சியில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்' என, குலாம்நபி ஆசாத் உட்பட, கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர், மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி துாக்கினர். இதனால், அவர்கள் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஓரம் கட்டப்பட்டனர்.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதையடுத்து, காங்., மேலிடம் தேர்தல் பணிகளை துவக்கியுள்ளது. தேர்தலுக்கு தயாராகும் வகையில் புதிய நியமனங்களை, கட்சி தலைவர் சோனியா நேற்று முன்தினம் அறிவித்தார்.


latest tamil news


இதன்படி, கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், ஜம்மு - காஷ்மீர் தேர்தல் குழு தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், காஷ்மீர் அரசியல் விவகாரக் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரத்திலேயே, இந்த இரண்டு பதவிகளையும் ராஜினாமா செய்வதாக குலாம்நபி ஆசாத் அதிரடியாக அறிவித்தார்.

இது குறித்து, குலாம்நபி ஆசாத் ஆதரவாளர்கள் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினர் என்ற பதவியை, குலாம்நபி ஆசாத் ஏற்கனவே வகிக்கிறார். இந்நிலையில் அவரை அவமதிக்கும் வகையில், மாநில அளவிலான அரசியல் விவகாரக் குழுவுக்கு உறுப்பினராகவும், தேர்தல் குழுவுக்கு தலைவராகவும் நியமித்துள்ளனர்.

நான்கு பிரதமர்களின் கீழ் அமைச்சராக பணியாற்றிய அனுபவம் உள்ள மூத்த தலைவரை சிறுமைப்படுத்துவது, துரதிர்ஷ்டவசமானது. குலாம்நபி ஆசாத், காங்., செயற்குழுவில் 37 ஆண்டுகளாக இடம் பெற்றுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஜம்மு - காஷ்மீரில் குலாம்நபி ஆசாத்தின் ஆதரவாளர்களிடமிருந்து முக்கிய பதவிகள் பறிக்கப்பட்டதன் காரணமாக, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக காங்கிரசில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
18-ஆக-202212:40:30 IST Report Abuse
jayvee ஆளே இல்லாத டீக்கடையில் இவளவு சண்டையா
Rate this:
Cancel
18-ஆக-202212:03:27 IST Report Abuse
ராமகிருஷ்ணன் இந்த மாதிரியான கோஷ்டிகள் இருப்பதால் தான் காங்கிரஸ் கட்சியின் இருப்பை மக்கள் உணர்கிறார்கள். இல்லாவிட்டால் மக்கள் மறந்து விடுவார்கள்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
18-ஆக-202210:45:17 IST Report Abuse
sankaseshan கோஷ்டி பூசல் காங்கிரஸுக்கு புதுசு அல்ல பழகி போன விஷயம் இனிமேல் கட்சி தலை தூக்குவது கடினம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X