கொரோனா தடுப்பூசி சான்றிதழ்: அமைச்சர் சுவாரசிய தகவல்

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி சான்றிதழ், 'டிஜிட்டல்' வடிவில் வழங்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவில் காகிதமாக வழங்கப்படுவது குறித்த சுவாரசியமான தகவலை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.வெளியுறவு அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஜெய்சங்கர், சமீபத்தில் வெளியிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பலராலும் அதிகமாக
Jaishankar, Corona Vaccine, COVID Vaccine Certificate, CVC

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி சான்றிதழ், 'டிஜிட்டல்' வடிவில் வழங்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவில் காகிதமாக வழங்கப்படுவது குறித்த சுவாரசியமான தகவலை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

வெளியுறவு அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஜெய்சங்கர், சமீபத்தில் வெளியிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பலராலும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர் கூறியுள்ளதாவது:கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து, இயல்பு வாழ்க்கை சிறிது சிறிதாக திரும்பி வந்த நிலையில், 2021ல் அமெரிக்கா சென்றேன்.


latest tamil newsஅங்கு வசித்து வரும் என் மகனுடன் சேர்ந்து, ஒரு உணவகத்துக்கு சென்றேன். உணவகத்தின் வாயிலில் இருந்தவர்கள், கொரோனா தடுப்பூசி சான்றிதழை தரும்படி எங்களிடம் கேட்டனர். நான் உடனடியாக என் மொபைல் போனில், 'டிஜிட்டல்' வடிவில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்த சான்றிதழை காண்பித்தேன்.

அமெரிக்காவில் வசிக்கும் என் மகனோ, தன் பர்சில் மடித்து வைத்திருந்த ஒரு காகிதத்தை எடுத்துக் காண்பித்தார். எனக்கு சிரிப்பு வந்தது. அப்போது, 'நாங்கள் எங்கே இருக்கிறோம்; நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என, இப்போது தான் தெரிகிறது' என, என் மகனிடம் கூறினேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஆக-202220:00:36 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0 ;;;;;;
Rate this:
Cancel
18-ஆக-202219:03:23 IST Report Abuse
அப்புசாமி எனக்குத் தெரிந்தவர்களுக்கு அமெரிக்காவில் டிஜிட்டல் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் உள்ளன. இவர் பையன் எங்கே தடுப்பூசி போட்டுக்குட்டாரோ தெரியலை. அமெரிக்காவில் மக்களின் மெடிக்கல் ரிக்கார்டுகளை டிஜிட்டல் வடிவில் ஆவணப்படுத்தத் தொடங்கி 50 வருஷத்துக்கு மேலாகிறது. இன்னிக்கும் அங்கே ஒரு பைசாவான ஒரு பென்னி செல்லும். இங்கே மாதிரி எடுத்தேன் கவிழ்த்தேன்னு 25, 50 பைசாக்களை செல்லாக்காசாக்க மாட்டார்கள். நோட்பந்தின்னு ... வாணாம்.. போதும்.
Rate this:
Cancel
ravi -  ( Posted via: Dinamalar Android App )
18-ஆக-202213:50:13 IST Report Abuse
ravi . I have paper and Vsafe vaccine records that I can access online anytime anywhere.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X