'மனைவியை மற்ற பெண்களுடன் ஒப்பிடுவது சரியான செயல் அல்ல'

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
கொச்சி: 'மனைவியை மற்ற பெண்களுடன் ஒப்பிடுவதும், தன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என, தொடர்ந்து கேலி செய்வதும், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மன உளைச்சலையும், கொடுமையையும் தருவதற்கு சமமானது' என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளாவைச் சேர்ந்த கணவரும், அவரது மனைவி யும், 13 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர். விவாகரத்து கோரி, அந்த பெண் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு
Husband, Wife, Kerala HC, High Court

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொச்சி: 'மனைவியை மற்ற பெண்களுடன் ஒப்பிடுவதும், தன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என, தொடர்ந்து கேலி செய்வதும், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மன உளைச்சலையும், கொடுமையையும் தருவதற்கு சமமானது' என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த கணவரும், அவரது மனைவி யும், 13 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர். விவாகரத்து கோரி, அந்த பெண் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த நீதிமன்றம், மனைவியை கணவர் கொடுமைப்படுத்தியதை காரணமாக வைத்து, இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.


latest tamil news


இதை எதிர்த்து, கணவர் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு, கே.நரேந்திரன், சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பெண்களுக்கு எதிரான சமூக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற நிலையில், மனைவியை பிற பெண்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதும் ஒரு கொடுமை தான். மனைவி, தன் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என, தொடர்ந்து கிண்டல் செய்வது, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மன உளைச்சலை தருவதற்கு சமம்.

இந்த வழக்கில், கணவரின் நடத்தை, குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றதாக இல்லை. இருவரும், மிக குறைந்த காலமே சேர்ந்து வாழ்ந்துள்ளனர். இருவருக்கும், 2009 ஜனவரியில் திருமணம் நடந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஆக-202218:58:30 IST Report Abuse
அப்புசாமி ஆண்களே... பணம் நிறைய சம்பாரியுங்க. நல்ல மனைவி கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகும்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
18-ஆக-202212:38:42 IST Report Abuse
jayvee எல்லா கணவர்களும் அஜித்தை போல, மம்முட்டி போல, கமல் போல இருக்கவேண்டும் எதிர்பார்க்கும் மனைவிகளுக்கு என்ன அறிவுரை ?
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
18-ஆக-202211:42:58 IST Report Abuse
J. G. Muthuraj சமுதாயமே....ஆணுக்கும் இரக்கம் காட்டு.....இதே செயல் VICEVERSA (நிலையெதிர் மாறாக) வாகவும் நடக்குதுங்க.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X