இந்தியாவில் உலக கோப்பை கால்பந்து: உச்சநீதிமன்றம் உத்தரவு

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: ''இந்திய கால்பந்து மீதான தடையை நீக்கவும், உலக கோப்பை தொடரை நடத்தவும் மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) தலைவராக இருந்தார் பிரபுல் படேல் 65. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') விதிப்படி, பிரபுல் படேலை, உச்சநீதிமன்றம் நீக்கியது. புதியதாக தேர்தல் நடத்தும் வரை,
FIFA, U17 Womens World Cup,Foot Ball, India, Supreme Court,இந்தியா,உச்ச நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ''இந்திய கால்பந்து மீதான தடையை நீக்கவும், உலக கோப்பை தொடரை நடத்தவும் மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) தலைவராக இருந்தார் பிரபுல் படேல் 65. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') விதிப்படி, பிரபுல் படேலை, உச்சநீதிமன்றம் நீக்கியது. புதியதாக தேர்தல் நடத்தும் வரை, ஏ.ஐ.எப்.எப்., வை நிர்வகிக்க, முன்னாள் நீதிபதி தேவ் தலைமையில் மூன்று பேர் குழுவை (சி.ஒ.ஏ.,) நியமித்தது. ஏ.ஐ.எப்.எப்., க்கு புதிய விதிகள் ஏற்படுத்தப்பட்டன.

தேர்வுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை, 36ல் இருந்து 72 ஆக அதிகரிக்கப்பட்டது. சி.ஒ.ஏ., முடிவுக்கு மாநில சங்கங்கள், 'பிபா' எதிர்ப்பு தெரிவித்தன. இதைக் கண்டு கொள்ளாத சி.ஒ.ஏ., கோர்ட் அனுமதியுடன் ஆக. 28ல் தேர்தல் நடத்த முடிவு செய்தது. உடனடியாக செயலில் இறங்கிய 'பிபா', 'மூன்றாம் தரப்பின் தேவையற்ற தலையீடு' காரணமாக, இந்திய கால்பந்துக்கு கூட்டமைப்புக்கு தடை விதித்தது. வரும் அக். 11-30ல் இந்தியாவில் நடக்க இருந்த பெண்களுக்கான உலக கோப்பை (17 வயது) தொடரின் உரிமத்தையும் ரத்து செய்தது.


latest tamil news



தொடரும் பேச்சுவார்த்தை:

இதனிடையே தேர்தல் தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில், நீதிபதிகள் சந்திரசூட், போபண்ணா, பரித்வாலா இடம் பெற்ற 'பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ''மத்திய அரசு, சி.ஒ.ஏ., குழு இணைந்து 'பிபாவுடன்' இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கான உலக கோப்பை (17 வயது) தொடரை நடத்துவது குறித்து சில முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆக. 22 வரை வழக்கை தள்ளி வைக்க வேண்டும்,'' என்றார்.


கோர்ட் உத்தரவு:

பின் 'பெஞ்ச்' கூறியது: இந்தியாவில் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சர்வதேச கால்பந்து தொடர் நடப்பது என்பது சிறப்பான நிகழ்வு. இதை நடத்துவதில் தான் 'பெஞ்ச்' கவனம் செலுத்துகிறது. இதைத் தடுக்க வெளியில் இருந்து யாராவது தலையீடு செய்தால், அதை பொறுத்துக் கொள்ள முடியாது. இந்தியாவில் உலக கோப்பை தொடர் நடத்தவும், ஏ.ஐ.எப்.எப்., மீதான தடையை நீக்கவும் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். வழக்கு வரும் ஆக.22க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
18-ஆக-202209:22:05 IST Report Abuse
Sampath Kumar ஒரு பக்கம் தடை இன்னொரு பக்கம் உலக கோப்பையை நடத்தலாம் ஏன் இந்த குழப்பம்? தீர்ப்பு தெளிவாக இல்லை யார்க்கு பயந்து தீர்ப்பு அளிப்பதாக தெரிகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X