உயிருக்கு உலை வைக்கும் உணவகங்கள்: அதிகாரிகள் விழிக்க வேண்டியது கட்டாயம்

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
சென்னை: சென்னையில், பிரபல வணிக வளாகத்திலுள்ள சைவம் மற்றும் அசைவ உணவு கடைகளில் புழு, பூச்சிகள் நெளியும் பொருட்களில் உணவு தயாரிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அசைவ உணவகங்களைத் தொடர்ந்து, சைவ உணவகத்திலும் தரமற்ற உணவுகள் வழங்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மத்தியில், நம்பி சாப்பிடலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.மக்களின் உயிருக்கு உலை

சென்னை: சென்னையில், பிரபல வணிக வளாகத்திலுள்ள சைவம் மற்றும் அசைவ உணவு கடைகளில் புழு, பூச்சிகள் நெளியும் பொருட்களில் உணவு தயாரிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அசைவ உணவகங்களைத் தொடர்ந்து, சைவ உணவகத்திலும் தரமற்ற உணவுகள் வழங்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மத்தியில், நம்பி சாப்பிடலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மக்களின் உயிருக்கு உலை வைக்கும் தரமற்ற உணவுகள் தயாரிக்கும் உரிமையாளர்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கை வலுத்துள்ளது.latest tamil news
சென்னை, அண்ணா நகரில் உள்ள வி.ஆர்.மால் என்ற வணிக வளாகத்திற்கு, தினசரி நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த வணிக வளாகத்திலுள்ள, நம்ம வீடு வசந்த பவன் என்ற உணவகத்தில், பெண் ஒருவர் சோளாபூரி சாப்பிட்டார். அதில், புழு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், போலீசில் புகார் அளித்தார்.புகார் குறித்து அறிந்த, உணவு பாதுகாப்புத் துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம் வி.ஆர்.மால் வணிக வளாகத்தின் நம்ம வீடு வசந்த பவன் உணவகத்தில் ஆய்வு செய்தனர்.

அந்த உணவகத்தின் சமையலறை, சுகாதாரமற்ற முறையில், துர்நாற்றம் வீசும் அளவில் இருந்தது. தொடர்ந்து, உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கை ஆய்வு செய்தனர்.அங்கிருந்த கோதுமை மாவு உள்ளிட்ட பொருட்களில் புழு, பூச்சிகள் இருந்ததைக் கண்டு, உணவு பாதுகாப்புத் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து, வணிக வளாகத்திலுள்ள மற்ற கடைகளிலும் ஆய்வு செய்தனர். அப்போது சில கடைகளில், கெட்டுப் போன கோழி இறைச்சிகள் வைத்திருந்தது தெரிந்தது.இதையடுத்து, வணிக வளாகத்திலுள்ள நான்கு உணவகத்தின் சமையல் அறைகளுக்கு 'சீல்' வைத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், நான்கு கடைகளுக்கும் தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.


நடவடிக்கை


சென்னையில் ஏற்கனவே, பிரபல அசைவ உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகளை கொண்டு உணவு தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனங்களைக் கொண்டு பளபளப்பாக மாற்றப்படுகின்றன. 'கலர்' அப்பளங்களில் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது போன்று, நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய பல உணவு பொருட்களில் கலப்படம் அதிகரித்து வருகிறது.


latest tamil news

கோரிக்கைஇந்நிலையில், தெருவோர உணவகங்கள் துவங்கி, பிரபல உணவகங்கள், வணிக வளாகங்களில் செயல்படும் உணவகங்கள் என அனைத்திலும் சைவ, அசைவ உணவுகள் தரமற்ற மற்றும் கெட்டுப்போன உணவுப் பொருட்களில் சமைக்கப்படுவதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.
இதனால், ஹோட்டல்களில் உணவுகளை நம்பி சாப்பிடலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.மக்களின் உயிருக்கு உலை வைக்கும் தரமற்ற உணவுகள் தயாரிக்கும் உரிமையாளர்கள் மீது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை வலுத்துள்ளது.


புகார் அளிக்க...இது குறித்து, சென்னை உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறியதாவது:
வணிக வளாகத்தில் இருந்த சில உணவகங்களில், உணவுப் பொருட்கள் அடங்கிய மூட்டைகளில் ஓட்டை இருந்தது. அவற்றில் புழு, பூச்சிகளும் இருந்தன. மேலும், உரிய வகையில் பதப்படுத்தாத இறைச்சிகளும், கெட்டுப் போன பழங்களும் இருந்தன.
அந்த உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சென்னையில் இது போன்ற தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை செய்யும் கடைகள் குறித்து, 94440 42322 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தாம்பரத்திலும் இதே நிலைமைதாம்பரம் மாநகராட்சியில், 70 வார்டுகளும், ஐந்து மண்டலங்களும் உள்ளன. இம்மாநகராட்சியில் ஜூலை மாதம் 30 ஹோட்டல்களில் சோதனை நடத்தி, செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட கோழி இறைச்சி மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்; 60 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில், கிழக்கு தாம்பரத்தில் இயங்கி வரும் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி என்ற ஹோட்டலில் மட்டன் பிரியாணியில் புழு இறந்து கிடந்தது குறித்து, வாடிக்கையாளர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதிகாரிகள் ஆய்வு செய்ததில், ஹோட்டலின் சமையல் கூடம் மற்றும் உணவருந்தும் இடம் முழுதும், சுகாதாரமின்றி இருந்துள்ளது. அத்துடன், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் இறைச்சி சுற்றி வைக்கப்பட்டிருந்ததும் தெரிந்தது.

இதையடுத்து ஹோட்டலுக்கு 2,௦௦௦ ரூபாய் அபராதம் விதித்தனர். அதேபோல், 40 டீக்கடைகளில் சோதனை நடத்தி, 15 கிலோ கலப்பட டீ துாள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டுள்ளது.இதைத் தவிர, மூன்று மாதங்களில், 70 கிலோ அளவுக்கு, நாள்பட்ட கோழி இறைச்சிகளை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.


சாட்டையை சுழற்றுவாரா முதல்வர்?தரமற்ற உணவு விற்பனையில் ஈடுபடும் உணவகங்கள், உற்பத்தி செய்யும் போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகும். குழந்தைகளை கவரும் வகையில் நிறமிகள் சேர்த்து விற்கப்படும் உணவு பொருட்கள் மாநகரில் பெருகி உள்ளன.

வெள்ளப் பாதிப்பை தடுக்க, வடிகால் பணியை கையில் எடுத்த முதல்வர், அதேபோல் மக்கள் நலனை கருத்தில் வைத்து உணவு பொருட்களில் விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்கள், உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.விதிமீறல் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களின் உரிமத்தை ரத்து செய்து, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram - mayiladuthurai,இந்தியா
18-ஆக-202214:25:31 IST Report Abuse
ram சாட்டை அவர் கையில் இருந்தால்தானே சுத்துவதர்கு, எவர்குக்கும் பயம் துளிகூட இல்லை இந்த விடியல் ஆட்சியில்.
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
18-ஆக-202212:21:16 IST Report Abuse
Nellai tamilan எளிமையான உபாயம் வெளியில் சாப்பிடும் பழக்கத்தை குறைத்துக் கொள்வது மட்டுமே. வீட்டில் சமைக்கும் உணவு உடலுக்கும் மனதிற்கும் நல்லது
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
18-ஆக-202210:59:11 IST Report Abuse
raja தமிழக நம்பர் ஒன்னு ப்ரின்சிபாலுக்கு சாப்பிட்டு புறங்கை நக்க வாய்ப்பு கொடுத்தால் சாட்டையாவது சாக்கடையாவதுன்னு போயிகிட்டே இருப்பாரு..... அப்புறம் ஸ்விட்சர்லாந்துல ஸ்காச் கம்பனி எப்படி வாங்கிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X