அக்., விரைவு தரிசன டிக்கெட்: இன்று வெளியீடு

Added : ஆக 18, 2022 | |
Advertisement
திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், அக்., மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளமான www.tirupatibalaji.ap.gov.inல் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளும் விதமாக, ஏழுமலையான் விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன்படி இன்று 9: ௦௦ மணிக்கு அக்., மாதத்திற்கான
அக்., விரைவு தரிசன டிக்கெட்: இன்று வெளியீடு

திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், அக்., மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளமான www.tirupatibalaji.ap.gov.inல் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளும் விதமாக, ஏழுமலையான் விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன்படி இன்று 9: ௦௦ மணிக்கு அக்., மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

வரும் செப்., 27ம் தேதி முதல் அக்.,5ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதால் அந்நாட்களில் தர்மதரிசனத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, பிரம்மோற்சவ தேதிகளில் விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் இதை கவனத்தில் வைத்து, அதன்படி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X