அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி; தன்னம்பிக்கை கொடுத்த கலெக்டர்

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை : ஆவடி அருகே, அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு 6 ஆண்டுகளாக அவதியடைந்து வந்த சிறுமியை, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் சந்தித்து, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வீராபுரம் ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்தவர்கள் ஸ்டீபன் ராஜ் -- சவுபாக்யா தம்பதி. இவர்களின் மூத்த மகள் டானியா, 9. இவர், வீராபுரம் அரசினர் பள்ளியில் நான்காம்
அரிய நோய், சிறுமி, கலெக்டர்

சென்னை : ஆவடி அருகே, அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு 6 ஆண்டுகளாக அவதியடைந்து வந்த சிறுமியை, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் சந்தித்து, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வீராபுரம் ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்தவர்கள் ஸ்டீபன் ராஜ் -- சவுபாக்யா தம்பதி. இவர்களின் மூத்த மகள் டானியா, 9. இவர், வீராபுரம் அரசினர் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார்.டானியா, கடந்த ஆறு ஆண்டுகளாக அரிய வகை முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், டானியாவின் வலது கண் கன்னம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுதும் சிதைய துவங்கியது. இதற்காக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால், பள்ளி படிப்பை தொடர முடியாமல், டானியா வீட்டிலேயே முடங்கி கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் மாவட்ட மருத்துவ துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர்கள், சிறுமியை பரிசோதனை செய்தனர்.மேலும், இதற்கு முன் சிறுமிக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டு அறிந்தனர்.இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவை, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் நேற்று சந்தித்து உரையாடினார்.


latest tamil newsசிறுமியின் உடல்நலம் குறித்து விசாரித்த கலெக்டர், ''பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தேவையான அனைத்து மருத்துவ செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாகவும், சென்னையில் உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ''பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட அசவுகரியங்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தையின் மருத்துவ சிகிச்சைகள் முடிவுற்ற பின், குழந்தை டானியாவின் குடும்பத்தினர் வசிக்க அரசு சார்பில் வீடு ஒதுக்கி தரப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
18-ஆக-202215:03:43 IST Report Abuse
Vena Suna ஆரம்பத்திலேயே என்ன வியாதி என்று கண்டுபிடிக்காமல் மருத்துவர்கள் சொதப்பல்.குழந்தை பாவம்.
Rate this:
Cancel
18-ஆக-202214:25:42 IST Report Abuse
SUBBU,MADURAI அவளுடைய மன வேதனைக்கு முதலில் கவுன்சிலிங் கொடுங்கள்.
Rate this:
Cancel
Sakthi - DIST KORBA CG,இந்தியா
18-ஆக-202213:25:10 IST Report Abuse
Sakthi Prompt action by Govt officials is very much appreciable. Humanity still prevail with Govt officials.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X