உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் உணவு, மருத்துவ தேவைக்கு கையேந்தும் முதியோர்

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
பொன்னேரி: பொன்னேரி வட்டத்தில் 2,000 பேருக்கு, அரசின் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பயனாளிகள், உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்கு அடுத்தவரிடம் கையேந்தும் நிலை ஏற்படும் என, வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள, ஒன்பது குறுவட்டங்களில், 32 ஆயிரம் பயனாளிகள் மாதாந்திர முதியோர் உதவித்தொகை பெற்று

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பொன்னேரி: பொன்னேரி வட்டத்தில் 2,000 பேருக்கு, அரசின் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பயனாளிகள், உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்கு அடுத்தவரிடம் கையேந்தும் நிலை ஏற்படும் என, வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.latest tamil news
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள, ஒன்பது குறுவட்டங்களில், 32 ஆயிரம் பயனாளிகள் மாதாந்திர முதியோர் உதவித்தொகை பெற்று வந்தனர். ஆதரவற்ற நிலையில் உள்ளவர்கள், கணவர் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் தனியாக வசிக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.


வலியுறுத்தல்இதற்காக தகுதி வாய்ந்தவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணபித்து, வி.ஏ.ஓ., ஆர்.ஐ., ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, அவர்கள் பரிந்துரையின்படி, சமூக நலத்துறை அதிகாரிகள் வாயிலாக, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, முதியோர் உதவித்தொகையாக, மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மேற்கண்ட பயனாளிகளில், 2,000 பேருக்கு இம்மாதம் உதவித்தொகை கிடைக்கவில்லை. ஆதார் எண் அடிப்படையில் பல்வேறு காரணங்களால், அவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.மாதந்தோறும் அரசு வழங்கும், 1,000 ரூபாய் உதவித்தொகை முதியோர் தங்களது மருத்துவ செலவினங்களுக்கும், அன்றாட உணவு தேவைக்கும் பயன்படுத்தி வந்தனர்.

திடீரென அவர்களது உதவித்தொகை நிறுத்தப்பட்டதால், அவர்கள் பெரும் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.பாதிக்கப்பட்ட பயனாளிகளில் சிலர், நேற்று, பொன்னேரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் அமர்ந்து, தங்களுக்கு அரசு உதவிட வேண்டும் என, வலியுறுத்தினர்.அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு நடத்தி, ஆதார் எண், முதியோர் உதவித்தொகை விபரங்களை எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொண்டு, அவர்களை திருப்பி அனுப்பினர்.


சிரமம்உதவித்தொகை கிடைக்காத பயனாளிகள் தெரிவித்ததாவது:இரண்டு சமையல் எரிவாயு உருளை வைத்துள்ளவர்கள், சர்க்கரை பெறும் 'என்' குறியீடு உள்ள குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் கண்டயறிப்பட்டு, முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


latest tamil news
அரசு வழங்கும், இந்த முதியோர் உதவித்தொகைதான் இன்னும் சில காலம் எங்களை உயிர்ப்புடன் வாழ உந்துசக்தியாக இருந்தது.மகன், மகள் மற்றும் உறவினர் தயவின்றி தனியாக வாழ்வதற்கு முதியோர் உதவித்தொகை உதவியது.தற்போது அது இல்லையெனில், எஞ்சிய வாழ்க்கை சிரமத்துடன் இருக்கும். அடுத்தவரை அண்டி பிழைக்கும் நிலை தான் இனி தொடரும். அரசு உண்மையான, வறுமையில் வாடும் பயனாளிகளுக்கு தொடர்ந்து முதியோர் உதவித்தொகை வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


கண்காணிப்புஇது குறித்து சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:முதியோர் உதவித்தொகை பெறுபவர்களின் ஆதார் எண்ணை கொண்டு, அவர்களது பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுகிறது.
ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நிலம் வாங்கியது அல்லது விற்பனை செய்தது, 2 சிலிண்டர்கள் வைத்திருப்பது, குடும்பத்தில் உள்ளவர்களில் எவரேனும் அரசு ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருப்பது தெரிந்து, அவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டு உள்ளது. தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வந்து முறையிடுவதால், அவர்களிடம் ஆதார் எண் விபரங்களை பெற்று உள்ளோம். உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன் கோபால் புரம் ஒரு பிச்சைக் காரனே பல லட்சம் தானமாக குடுக்கிறான் என்றால் மரத்த தமிழ் நாட்டில் முதியவர்கள் 1000 ரூபாய்க்கு கையேந்தி நிற்பார்களா??.
Rate this:
Cancel
visu - tamilnadu,இந்தியா
18-ஆக-202213:04:49 IST Report Abuse
visu இவர்கள் ஒட்டு போடக்கூட வர மாட்டார்கள் என்பதாலா
Rate this:
RAMAKRISHAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
18-ஆக-202213:22:58 IST Report Abuse
RAMAKRISHAN NATESAN     இலவசத்தைவிட மோசமானது சநாதனம்.....சநாதன ஆட்சி என்பது தலைமுறைகளை பாதிக்கிறது...
Rate this:
Nakkeeran - Hosur,இந்தியா
18-ஆக-202214:04:04 IST Report Abuse
Nakkeeranபிழைப்புக்காக வெளி நாடு செல்பவரக்கெல்லாம் சனாதனம் பற்றி பேச அருகதை கிடையாது .சனாதனம் என்ற ஒரு வார்த்தையே ஒழுங்காக எழுத தெரியவில்லை...
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
18-ஆக-202215:03:54 IST Report Abuse
வாய்மையே வெல்லும்சரியா தோழரே ?...
Rate this:
Cancel
HONDA -  ( Posted via: Dinamalar Android App )
18-ஆக-202211:06:10 IST Report Abuse
HONDA வேண்டாத புரட்சிரமான தினம்விழா எடுக்கும் முதல்வருக்கு இதெல்லாம் தெரிவிக்கநல்ல உதவியாளர் இல்லையா
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
18-ஆக-202213:03:08 IST Report Abuse
Dhurveshஒருவேளை மோடி சொன்னாரே இலவசம் தடுக்க படணும் என்று சொன்னதால் இந்த மாதிரி ஆகிவிட்டதோ அப்போ இதற்கும் மோடி தான் காரணமோ...
Rate this:
Durai Kuppusami - chennai ,இந்தியா
18-ஆக-202214:02:58 IST Report Abuse
Durai Kuppusamiவாய்ல நல்லா வந்துரப்போது .........
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
18-ஆக-202214:39:00 IST Report Abuse
Dhurvesh;;;;...
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
18-ஆக-202215:04:34 IST Report Abuse
வாய்மையே வெல்லும்இம்ரான் அடிவருடிகளும் மோடியை குறை சொல்லவில்லை என்றால் ஒரு போதும் pozhuthu...
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
18-ஆக-202215:06:08 IST Report Abuse
வாய்மையே வெல்லும்இம்ரான் அடிவருடிகளுக்கு சம்பந்தமே இல்லாமல் மோடியை எல்லாவிஷயங்களுக்கும் இழுக்கவில்லை என்றால் அந்த கும்பலுக்கு பொழுதுபோகாது .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X