கிரைம் ரவுண்ட் அப்: 3 வயது குழந்தை பலாத்காரம்; 14 வயது சிறுவன் கைது

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
நுஹ்: ஹரியானாவில், 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.ஹரியானாவில், நுஹ் கிராமத்தில் ஒரு பெண், தன் 3 வயது பெண் குழந்தையுடன் வயலுக்கு சென்றுள்ளார். குழந்தை, தாயின் பின்னால் நடந்து சென்றது. அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், குழந்தையை தாய்க்கு தெரியாமல் துாக்கிச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துஉள்ளான்.இது குறித்த
crime, police, arrest

நுஹ்: ஹரியானாவில், 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.
ஹரியானாவில், நுஹ் கிராமத்தில் ஒரு பெண், தன் 3 வயது பெண் குழந்தையுடன் வயலுக்கு சென்றுள்ளார். குழந்தை, தாயின் பின்னால் நடந்து சென்றது. அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், குழந்தையை தாய்க்கு தெரியாமல் துாக்கிச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துஉள்ளான்.
இது குறித்த புகாரின்பேரில், போலீசார் சிறுவனை கைது செய்தனர். இது தொடர்பாக, போலீசார் கூறியதாவது: தாயுடன் வயலுக்கு சென்ற குழந்தையை, அந்த சிறுவன் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில், உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். குழந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. சிறுவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தமிழக நிகழ்வுகள்:
போதை மாணவன் அடித்து கொலை


கோவை: போதைக்கு அடிமையான சிறுவன் கொலை செய்யப்பட்டான்.
கோவையை சேர்ந்த 17 வயது சிறுவன், அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்தான். போதைக்கு அடிமையானவன், பள்ளிக்கு செல்லாமல் சுற்றி வந்தான்.நேற்று முன்தினம் நண்பர்களுக்கும், அவனுக்கும் ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்டான்; வலிப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொலை வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


ரசாயனத்தை உறிஞ்சிய மாணவர்கள் மயக்கம்


புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே, வாராப்பூர் அரசு பள்ளியில் ஆய்வகத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நான்கு மாணவர்கள், 'சோடியம் சல்பேட்' ரசாயனத்தை தவறுதலாக உட்கொண்டதால் மயக்கமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, வாராப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், நேற்று மாலை, ஒன்பதாம் வகுப்பை சேர்ந்த 20 மாணவர்கள் ரசாயன ஆய்வகத்தில் பயிற்சி மேற்கொண்டனர்.பயிற்சியின் போது, நான்கு மாணவர்கள் தவறுதலாக சோடியம் சல்பேட் திரவத்தை வாயில் உறிஞ்சியதாக கூறப்படுகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர்கள், அங்கேயே மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் தற்போது நலமாக உள்ளனர்.இது குறித்து, செம்பட்டிவிடுதி போலீசார் விசாரிக்கின்றனர்.


போதையில் தகராறு; வாலிபர் கொலை


நாகர்கோவில் : போதையில் தகராறு செய்தவரை அடித்து கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம் கொட்டாரம் அருகே அச்சன்குளத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்ராஜா 22. குடி பழக்கம் உள்ள இவர் தன் வீட்டில் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம்.வழக்கம் போல நேற்று முன்தினமும் வீட்டில் தகராறு செய்து கொண்டிருந்தார். அதை, பக்கத்து வீட்டில் வசிக்கும் சாம்சன்மனோ 18, என்பவர் தட்டிக் கேட்டார்.அவரை, சுரேஜ்ராஜா அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளார். சாம்சன் மனோ தப்பினார்.சிறிது நேரத்தில் சுரேஷ்ராஜா போதையில் அப்பகுதியில் உள்ள ஓடையில் விழுந்து கிடந்துள்ளார்.இதை பார்த்த சாம்சன்மனோ கடப்பாரையை எடுத்து சென்று, சுரேஷ்ராஜா தலையில் அடித்து கொலை செய்தார்.கன்னியாகுமரி போலீசார் சாம்சன் மனோவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


latest tamil news
ரூ. 14 ஆயிரம் லஞ்சம்; வி.ஏ.ஓ., கைது


துாத்துக்குடி: பட்டா மாறுதல் செய்ய ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கே.சிதம்பராபுரத்தை சேர்ந்தவர் ராகவன். தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேச பெருமாளிடம் விண்ணப்பித்திருந்தார். அதற்கு அவர் ரூ.14 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., ஹெக்டர் தர்மராஜிடம் ராகவன் புகார் செய்தார். நேற்று அலுவலகத்தில் இருந்த வி.ஏ.ஓ.விடம், போலீசார் ரசாயன பவுடர் தடவி கொடுத்த ரூ.14 ஆயிரம் பணத்தை ராகவன் கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ஹெக்டர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர்கள் சுதா, ஜெயஸ்ரீ ஆகியோர் வி.ஏ.ஓ.,வை கைது செய்தனர்.அவரது சொந்த ஊரான கழுகுமலை அருகே காலாங்கரைபட்டி வீட்டில் சோதனை மேற்கொண்டனர். துாத்துக்குடி பேரூரணி சிறையில் வெங்கடேச பெருமாள் அடைக்கப்பட்டார்.


வேளாங்கண்ணியில் தொழிலதிபர் வெட்டிக்கொலை


நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில், நேற்றிரவு தொழிலதிபர், மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
நாகை அடுத்த வடக்கு பொய்கைநல்லுாரைச் சேர்ந்தவர் மனோகர்,41. தொழிலதிபர். இவர் நேற்று இரவு, வேளாங்கண்ணியில் தனக்கு சொந்தமான நிதி நிறுவன அலுவலகத்தில், நண்பர் மணிவேல் என்பவருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அலுவலகத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், அரிவாளால் சரமாரியாக மனோகரை வெட்டினர். தடுக்க முயன்ற மணிவேலுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் சம்பவ இடத்திலே மனோகர் இறந்தார்.இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், அசம்பாவிதம் தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


ரூ.67 லட்சம் கையாடல்: வங்கி மேலாளர் கைது


திருநெல்வேலி: வாடிக்கையாளர்களின் வைப்பு நிதியிலிருந்து, 67 லட்சம் ரூபாய் கையாடல் செய்த வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவியில் செயல்படும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை மேலாளராக பணி புரிந்தவர் நடராஜன் 59; வடக்கு காருக்குறிச்சியை சேர்ந்தவர்.வங்கியில் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதியிலிருந்து முதிர்வடையும் காலத்திற்கு முன்பே மோசடியான முறையில், 67 லட்சம் ரூபாயை கையாடல் செய்துள்ளார்.இந்த முறைகேடு தெரிய வந்ததை அடுத்து அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். வங்கியின் முதன்மை மேலாளர் கிருஷ்ணன் புகாரின் படி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.


'டீல்' காவலர் 'சஸ்பெண்ட்'


கள்ளக்குறிச்சி : சாராய வியாபாரியிடம், காவலர் ஒருவர் பேசிய 'ஆடியோ'சமூக வலைதளங்களில் வெளி யானதைத் தொடர்ந்து அவரை 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், சாராயம் விற்பனை அதிகரித்து வருவதைத் தடுக்க எஸ்.பி., பகலவன், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில், கீழ்குப்பம் காவல் நிலைய போலீஸ்காரர் சண்முகம், சாராய வியாபாரியுடன் மாமூல் கேட்டு பேசும் ஆடியோ, சமூக வலை தளங்களில் நேற்று பரவியது.அதையடுத்து, போலீஸ்காரர் சண்முகம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை எஸ்.பி., பகலவன் நேற்று பிறப்பித்தார்.


உலக நிகழ்வுகள்:
மசூதியில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி


காபூல் : ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடித்து, 30க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நேற்று வழக்கமான தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள்பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், 30க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர்; ஏராளமானோர் காயமடைந்தனர். உடனடியாக ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
18-ஆக-202218:24:50 IST Report Abuse
Krishnamurthy Venkatesan போதை பொருட்களை விற்பவர்களை பிடித்து ஜெயிலில் போடுகிறார்கள். உற்பத்தியாளர்கள் வேறு விற்பனையாளர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்கிறார்கள். எனவே எங்கு, யார் உற்பத்தி செய்கிறார்கள் என கண்டுபிடித்து அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் அனைவரையும் பிடித்து கூண்ட்டொடு 20 வருடங்கள் சிறையில் தள்ள வேண்டும். குறுகி அரசியல் பிரஷர் வருமானால், அவர்களையும் மக்கள் மன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
18-ஆக-202211:15:41 IST Report Abuse
raja " போதைக்கு அடிமையான சிறுவன் கொல்லப்பட்டான் " "போதையில் தகராறு செய்தவரை அடித்து கொன்றவர்".... தமிழகத்துக்கு கேடுகெட்ட விடியல் இந்த ஓங்கோல் திருட்டு கொள்ளை கூட்டத்தினால்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X