சமருக்கு தான் தயாராகிறோம்: பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
ராமநாதபுரம்: பா.ஜ.,வுடன் எப்போதுமே சமரசம் இல்லை, என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில், அதற்கு பதிலடியாக ' நாங்கள் அவருடன் சமரசமல்ல.. சமருக்கு தான் தயாராகி வருகின்றோம், என்று பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.ராமநாதபுரத்தில் நடந்த பா.ஜ., சட்ட சபை, லோக்சபா தொகுதி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்தவர் கூறியது: அ.தி.மு.க., உள்கட்சி விவகாரத்தில்
Pon Radhakrishnan, BJP

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராமநாதபுரம்: பா.ஜ.,வுடன் எப்போதுமே சமரசம் இல்லை, என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில், அதற்கு பதிலடியாக ' நாங்கள் அவருடன் சமரசமல்ல.. சமருக்கு தான் தயாராகி வருகின்றோம், என்று பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ராமநாதபுரத்தில் நடந்த பா.ஜ., சட்ட சபை, லோக்சபா தொகுதி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்தவர் கூறியது: அ.தி.மு.க., உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை கவனித்து சரியான முடிவு எடுக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலினை நாங்கள் எப்போது சமரசத்திற்கு அழைத்தோம். மக்கள் பிரச்னைகளுக்கு அவருடன் சமருக்குத்தான்' நாங்கள் தயாராகியுள்ளோமே தவிர சமரசத்திற்கல்ல.


latest tamil news



அமைச்சர் மீது மட்டுமல்ல எந்த மனிதர் மீதும் செருப்பு வீசக் கூடாது தான். நான் மத்திய அமைச்சராக இருந்த போது சேலம் அருகே என் மீது தி.மு.க.,வினர் செருப்பு வீசினர்.அதை பெரிதுபடுத்தாமல் பெருந்தன்மையுடன் ஒதுங்கி சென்றேன். அரசியல் ஆக்கவில்லை.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் மணல் நிரம்பி சீர்கெட்டுள்ளது. இதுவரை 27 மீனவர்கள் உயிரிழந்தனர். சீர்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் எல்லை பகுதிகள், கடல் எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது, என்றார். மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, மாவட்ட தலைவர் கதிரவன், பொதுசெயலாளர் ஆத்மா கார்த்திக், சுப நாகராஜன் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopinathan S - chennai,இந்தியா
18-ஆக-202215:55:26 IST Report Abuse
Gopinathan S ....
Rate this:
Cancel
Gopinathan S - chennai,இந்தியா
18-ஆக-202215:54:31 IST Report Abuse
Gopinathan S ,,,,
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
18-ஆக-202213:38:46 IST Report Abuse
J. G. Muthuraj சமரசம் இல்லை .... சமரும் இல்லை ...நீ திருத்தி சொல்.... ஏதோ சங்காரமாம்.... வேதனை.... வேதனை... பொழுது விடிந்தவுடன் பாண்டியநாடு நம் கையில்....அதிலென்ன சந்தேகம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X