'நிப்ட்' இயக்குனர் மீதான வன்கொடுமை வழக்கு ரத்து

Added : ஆக 18, 2022 | |
Advertisement
சென்னை : தேசிய 'பேஷன் டெக்னாலஜி' கல்வி நிறுவனத்தின் வளாக இயக்குனர் அனிதா மாபெல் மீதான வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, தரமணியில் உள்ள 'நிப்ட்' எனப்படும் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், 2013 முதல் நிர்வாகம் மற்றும் கொள்முதல் பிரிவில், மூத்த உதவி இயக்குனராக பணியாற்றியவர் இளஞ்செழியன்.இவர், கட்டடப் பிரிவு உதவி



சென்னை : தேசிய 'பேஷன் டெக்னாலஜி' கல்வி நிறுவனத்தின் வளாக இயக்குனர் அனிதா மாபெல் மீதான வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, தரமணியில் உள்ள 'நிப்ட்' எனப்படும் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், 2013 முதல் நிர்வாகம் மற்றும் கொள்முதல் பிரிவில், மூத்த உதவி இயக்குனராக பணியாற்றியவர் இளஞ்செழியன்.இவர், கட்டடப் பிரிவு உதவி இயக்குனராக, கடந்தாண்டு ஆகஸ்ட்டில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, ஜாதி அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும், தரமணி காவல் நிலையத்தில், இளஞ்செழியன் புகார் அளித்தார்.
அந்த புகாரில், நிப்ட் வளாக இயக்குனர் அனிதா மாபெல் மனோகர் மீது, வன்கொடுமை சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, அனிதா மாபெல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார் நேற்று பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே, அவர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது' என்றார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X