மத்திய ஜி.எஸ்.டி., அலுவலக பணி மந்தம்: ரீபண்ட் பெறுவதில் தாமதம்

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருப்பூர்: ஆய்வாளர், கண்காணிப்பாளர்கள் இல்லாதது, தணிக்கை படிவ மாறுதல்களால், திருப்பூர் மத்திய ஜி.எஸ்.டி., அலுவலக பணிகள் மந்தமாகியுள்ளன. ஏற்றுமதியாளர்கள் ரீபண்ட் பெறுவதிலும், புதிய தொழில்முனைவோர் ஜி.எஸ்.டி., பதிவு சான்று பெறுவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) திருப்பூர் கோட்டம், திருப்பூர் ஒன்று முதல் ஐந்து சரகம் மற்றும் அன்னுார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்பூர்: ஆய்வாளர், கண்காணிப்பாளர்கள் இல்லாதது, தணிக்கை படிவ மாறுதல்களால், திருப்பூர் மத்திய ஜி.எஸ்.டி., அலுவலக பணிகள் மந்தமாகியுள்ளன. ஏற்றுமதியாளர்கள் ரீபண்ட் பெறுவதிலும், புதிய தொழில்முனைவோர் ஜி.எஸ்.டி., பதிவு சான்று பெறுவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.

மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) திருப்பூர் கோட்டம், திருப்பூர் ஒன்று முதல் ஐந்து சரகம் மற்றும் அன்னுார் என மொத்தம் ஆறு சரகங்களுடன் செயல்படுகிறது. பின்னலாடை உற்பத்தி நகரான திருப்பூரில், ஜி.எஸ்.டி., அலுவலக செயல்பாடு முக்கியமானதாக உள்ளன.

புதிதாக தொழில்துவங்கும் நிறுவனங்களின் ஆன்லைன் விண்ணப்பங்களை சரிபார்த்து, கள ஆய்வுகள் செய்து, ஜி.எஸ்.டி., பதிவு சான்று வழங்குவது; ஏற்றுமதி நிறுவனங்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து, ரீபண்ட் தொகை விரைந்து விடுவிப்பது ஜி.எஸ்.டி., அலுவலகத்தின் பிரதான பணிகள்.



latest tamil news




கடந்த இரு மாதங்களாக, கோட்ட ஜி.எஸ்.டி., அலுவலக பணிகள் மந்தாகியுள்ள. குறிப்பாக, ரீபண்ட் மற்றும் உள்ளீட்டு வரியை திரும்ப வழங்குதல், கள ஆய்வு செய்து, புதிய ஜி.எஸ்.டி., பதிவு சான்று வழங்கும் பணிகள் முடங்கியுள்ளன.

திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர், ஜி.எஸ்.டி., துணை கமிஷனர் யாசர்அராபத்தை நேற்று சந்தித்து, 'ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் ஏற்றுமதியாளர்களுக்கு ரீபண்ட் விடுவிப்பது; புதிய ஜி.எஸ்.டி., பதிவு சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. ரீபண்ட் பெறமுடியாமலும், ஜி.எஸ்.டி., பதிவெண் பெறமுடியாமலும் தொழில்முனைவோர் தவிக்கின்றனர்', என்றனர்.

துணை கமிஷனர் யாசர் அராபத் கூறியதாவது:
திருப்பூர் ஜி.எஸ்.டி., கோட்டத்தில், ஆறு ஆய்வாளர்கள் பணியில் உள்ளனர். இவர்களின் மூன்று பேர், அலுவல் சார்ந்த பயிற்சிக்காகவும், ஒருவர் இடம்மாறுதல் பெற்று சென்றுள்ளார். இரண்டு ஆய்வாளர் மட்டுமே பணியில் உள்ளனர். கண்காணிப்பாளர்கள் நான்கு பேர் இடம் மாறுதல் பெற்று சென்றுள்ளனர்.
'ரீபண்ட் வழங்குவதற்கான தணிக்கை படிவங்களில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த காரணங்களாலேயே, பணிகளில் காலதாமதம் ஏற்படுகிறது. புதிதாக மூன்று கண்காணிப்பாளர்கள், ஒரு ஆய்வாளர் விரைவில் பணியில் இணைகின்றனர். இம்மாத இறுதிக்குள், பணிகள் வேகப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிதாக மூன்று கண்காணிப்பாளர்கள், ஒரு ஆய்வாளர் விரைவில் பணியில்இணைகின்றனர். இம்மாத இறுதிக்குள்,பணிகள் வேகப்படுத்தப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
18-ஆக-202209:26:22 IST Report Abuse
Sampath Kumar எல்லாம் வாங்குற வரைக்கும் தான் அப்புறம் டீலில் விட்டுருவாங்க நம்ம மத்திய அரசு மாதிரி தான் எல்லாம் பண்ணுறாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X