ஆவணி மாத பூஜைகள்: சபரிமலையில் துவக்கம்

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | |
Advertisement
சபரிமலை: சபரிமலையில், ஆவணி மாத பூஜைகள் நேற்று துவங்கின. சபரிமலைக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து, கல் நடும் பணியும் நேற்று துவங்கியது.கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஆவணி மாத பூஜைகளுக்காக, நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது. அன்று, வேறு பூஜைகள் நடக்கவில்லை. நேற்று காலை, 5:00 மணிக்கு நடை திறந்த பின், நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடந்தன. ஆக., 21

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சபரிமலை: சபரிமலையில், ஆவணி மாத பூஜைகள் நேற்று துவங்கின. சபரிமலைக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து, கல் நடும் பணியும் நேற்று துவங்கியது.



latest tamil news




கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஆவணி மாத பூஜைகளுக்காக, நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது. அன்று, வேறு பூஜைகள் நடக்கவில்லை. நேற்று காலை, 5:00 மணிக்கு நடை திறந்த பின், நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடந்தன. ஆக., 21 வரை, இந்த பூஜைகள் நடைபெறும். தினமும், இரவு 7:00 மணிக்கு, படி பூஜை உண்டு. 21ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை சார்த்தப்படும். சபரிமலையில், தேவசம்போர்டுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த, வனத்துறை ஒத்துழைக்கவில்லை. வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டன.


latest tamil news



இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றம் தலையிட்டு, சபரிமலையில் தேவசம்போர்டுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய, தேவசம்போர்டு, வனம், வருவாய் துறை ஆகியவற்றுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, மூன்று துறையினரும் இணைந்து, நிலத்தை அளவீடு செய்யும் பணியை நேற்று துவக்கினர். இதன் வாயிலாக, வனத்துறை, தேவசம்போர்டுக்கு இடையே நீண்ட காலமாக இருந்த மோதல் முடிவுக்கு வரும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X