சிறார்களுக்கு பைக் கொடுத்த 3 பேருக்கு தலா ரூ.25,000 அபராதம்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
காரைக்கால் : காரைக்காலில்,18 வயதிற்குட்பட்ட சிறார்கள் ஓட்டுவதற்குஇரு சக்கரவாகனம் கொடுத்த வழக்கில் மூவருக்கு, 'லோக் அதாலத்' நீதிமன்றத்தில், தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.புதுச்சேரி மாநிலம்காரைக்கால் போக்குவரத்துஇன்ஸ்பெக்டர் மரிய கிறிஸ்டின்பால்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:காரைக்கால் மாவட்டத்தில் 2021ம் ஆண்டு, 18 வயதிற்கு குறைவான சிறார்கள்பைக்
சிறார்களுக்கு பைக் கொடுத்த 3 பேருக்கு தலா ரூ.25,000 அபராதம்

காரைக்கால் : காரைக்காலில்,18 வயதிற்குட்பட்ட சிறார்கள் ஓட்டுவதற்குஇரு சக்கரவாகனம் கொடுத்த வழக்கில் மூவருக்கு, 'லோக் அதாலத்' நீதிமன்றத்தில், தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

புதுச்சேரி மாநிலம்காரைக்கால் போக்குவரத்துஇன்ஸ்பெக்டர் மரிய கிறிஸ்டின்பால்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:காரைக்கால் மாவட்டத்தில் 2021ம் ஆண்டு, 18 வயதிற்கு குறைவான சிறார்கள்பைக் ஓட்டினர். அவர்களுக்குதனது வாகனத்தை ஓட்ட அனுமதியளித்த குற்றத்திற்காக,வாகனத்தின் உரிமையாளர்கள்மூவர் மீது வழக்கு பதியப்பட்டது.

அந்த மூவருக்கும்தலாரூ. 25,000 அபராதம் மற்றும் எச்சரிக்கையுடன் ஒரு நாள் சிறை தண்டனையும் வழங்கி,'லோக் அதாலத்' எனப்படும் தேசிய மக்கள்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.மேலும், சிறார் ஏற்படுத்தும் வாகன விபத்திற்கு எவ்வித விபத்து காப்பீடும் கிடைக்காமல், அதற்கும் சிறாரின் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளரே பொறுப்பேற்க வேண்டி உள்ளது. எனவே, 18 வயதிற்குட்பட்ட சிறார்கள் ஓட்டுவதற்கு வாகனத்தை வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X