இன்ஸ்பெக்டர் மகனை தாக்கி வழிப்பறி

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
பல்லடம் : பல்லடம் அருகே, போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகனை, மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர் திருமலைராஜன்; நீலகிரி மாவட்டம், மசினகுடியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ளார். இவரது மகன் பூபாலகிருஷ்ணன், 28; திருப்பூர் மாவட்டம், அவினாசிபாளையத்தில் சைட் இன்ஜினியராக வேலை பார்க்கிறார்.
 இன்ஸ்பெக்டர் மகனை தாக்கி வழிப்பறி


பல்லடம் : பல்லடம் அருகே, போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகனை, மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர் திருமலைராஜன்; நீலகிரி மாவட்டம், மசினகுடியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ளார்.

இவரது மகன் பூபாலகிருஷ்ணன், 28; திருப்பூர் மாவட்டம், அவினாசிபாளையத்தில் சைட் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். நேற்றிரவு, ரத்தக்காயத்துடன் பூபாலகிருஷ்ணன், பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் வந்தார்.அவர் போலீசாரிடம் கூறியதாவது:அவினாசிபாளையத்தில் இருந்து கோவைக்கு டூவீலரில் சென்ற போது, வழிமறித்த மூவர், மாதப்பூர் அருகே உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அடித்து உதைத்து, ஆபாச மொபைல் செயலி ஒன்றை நிறுவுமாறு கூறி, எனது புகைப்படத்தை அதில் பதிவேற்றம் செய்தனர். செயின், மோதிரம் ஆகியவற்றை பறித்ததுடன், ஏ.டி.எம்., கார்டு வாயிலாக, 13 ஆயிரம் ரூபாய் எடுத்தனர். எனது மேனேஜரிடம் பேசி, 5 ஆயிரம் ரூபாய் அனுப்புமாறு கூறினர். இறுதியில், என்னை அடித்து விரட்டினர்.இவ்வாறு, அவர் கூறினார்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
18-ஆக-202210:05:00 IST Report Abuse
Nellai tamilan விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சர்வாதிகாரியை தூக்கத்தில் இருந்து யாராவது எழுப்பி விடுங்கள்
Rate this:
Cancel
Mohan - COIMBATORE,இந்தியா
18-ஆக-202209:18:34 IST Report Abuse
Mohan சபாஷ் ..இப்பதான் போலீஸ் கண்களுக்கு உரைக்கும் .....
Rate this:
Cancel
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஆக-202209:10:50 IST Report Abuse
Chinnappa Pothiraj நாடு நல்லமுறையில் நேர்மையான முறையில் செல்கிறது. குற்றங்கள் குறைந்து வருகின்றன. அப்படியே கொஞ்சம் மனித உரிமைகள் அரசியல்வாதிகளிடமும் உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள், உங்களுக்கு பதக்கமும் நற்சான்றிதலும் அரசியல் தலைவராக்குவதற்குண்டான வாய்ப்புகளும் கிடைக்கும். வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X