கடத்தல் தங்க பிஸ்கெட்டுகள் அபகரிப்பு: வேப்பூர் அருகே 6 பேர் கைது; 4 பேருக்கு வலை

Added : ஆக 18, 2022 | |
Advertisement
வேப்பூர் : வேப்பூர் அருகே தங்க பிஸ்கெட் கடத்தலில் ஈடுபட்ட கும்பலில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தங்க பிஸ்கெட்டுகளுடன் தப்பிய 4 பேரை தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம் வேப்பூர் அடுத்த தே.புடையூரைச் சேர்ந்தவர் பாலையா, 40. இவர் துபாய்க்கு வேலைக்கு சென்றார். அங்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால், கடந்த 14ம் தேதி துபாயிலிருந்து மதுரை ஏர்போர்ட்டிக்கு வந்து,
கடத்தல் தங்க பிஸ்கெட்டுகள் அபகரிப்பு: வேப்பூர் அருகே 6 பேர் கைது; 4 பேருக்கு வலை

வேப்பூர் : வேப்பூர் அருகே தங்க பிஸ்கெட் கடத்தலில் ஈடுபட்ட கும்பலில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தங்க பிஸ்கெட்டுகளுடன் தப்பிய 4 பேரை தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம் வேப்பூர் அடுத்த தே.புடையூரைச் சேர்ந்தவர் பாலையா, 40. இவர் துபாய்க்கு வேலைக்கு சென்றார். அங்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால், கடந்த 14ம் தேதி துபாயிலிருந்து மதுரை ஏர்போர்ட்டிக்கு வந்து, விருத்தாசலம் அடுத்த பேரையூரிலுள்ள மாமியார் ராணி, 52 வீட்டிற்கு சென்றார். துபாயிலிருந்து கொண்டு வந்த பொருட்கள் மற்றும் பார்சல்களை அவரது வீட்டில் வைத்து விட்டு தலைமறைவானார்.இந்நிலையில், நேற்று முன்தினம் 9 பேர் கொண்ட கும்பல், இரண்டு கார்களில் வேப்பூர் அடுத்த தே.புடையூரிலுள்ள பாலையா வீட்டிற்கு வந்தனர்.

வீட்டில் உள்ளவர்களிடம் துபாயில் பாலையாவிடம் வழங்கிய பார்சலை கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதில், ஊராட்சி தலைவர் பாண்டியன் தலையீட்டு பொருட்களை மீட்டு தருவதாக கூறினார்.அதை தொடர்ந்து, ஊராட்சி தலைவர் பாண்டியன் மற்றும் பாலையா மாமியார் ராணி இருவரும், பைக்கில் பேரலையூருக்கு சென்று பொருட்கள், பார்சல்களை எடுத்து கொண்டு மீண்டும் தே.புடையூருக்கு புறப்பட்டனர்.

இவர்கள் நேற்று முன்தினம் இரவு 9:45 மணியளவில் எரப்பாவூர் - தாழநல்லுார் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென காரில் வந்த 4 பேர் குறிப்பிட்ட ஒரு பார்சலை மட்டும் பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதனால், சந்தேகமடைந்த ஊராட்சி தலைவர் பாண்டியன் வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடன், பாலையா வீட்டிற்கு சென்ற போலீசார் 5 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அதில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த, நம்புதாலை கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன், 30, அவரது நண்பர்கள், அரியலுார் மாவட்டம், பெரிய காடுவெட்டியைச் சேர்ந்த சின்னராசு, 24, திருச்சி மாவட்டம், கல் நாககோட்டையைச் சேர்ந்த விக்னேஷ், 27, திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த சாகுல் ஹமீது, 40, விருத்தாசலம் அடுத்த கிண்ணுாரைச் சேர்ந்த செல்வமணி, 35 என்பது தெரிய வந்தது.குமரேசன் தங்கம் கடத்தல் புரோக்கராக உள்ளார்.

கடந்த 14ம் தேதி 100 கிராம் எடையுள்ள 3 தங்க பிஸ்கெட்டுகளை, பாலையாவிடம் தனது உறவினர்களிடம் கொடுக்குமாறு வழங்கியுள்ளார். அவரது உறவினர்களிடம் தங்க கட்டிகளை பாலையா ஒப்படைக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த குமரேசன் கடந்த 15ம் தேதி துபாயிலிருந்து வந்தார். பின் இன்னோவா மற்றும் ஈடாஸ் கார்களில் வந்த 9 பேர் பாலையா வீட்டிற்கு சென்றனர். அதில், 4 பேர் பாலையா மாமியார் ராணியை வழிமறித்து தங்க கட்டிகளை பறித்துச்சென்றது தெரிய வந்தது.

அதை தொடர்ந்து, நேற்று பகல் 11:00 மணியளவில் பெண்ணாடம் பஸ் நிலையத்தில் இருந்த தே.புடையூரைச் சேர்ந்த பாலையாவை போலீசார் மடக்கி பிடித்தனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, குமரேசன், 30. பாலையா, 40. சின்னராஜ்,24. சாகுல்ஹமீது,40. விக்னேஷ்,27. செல்வமணி,35. ஆகியோரை கைது செய்தனர். மேலும், தங்க பிஸ்கெட்டுகளை பறித்துச்சென்ற 4 பேரை தேடி வருகின்றனர்.

கைதான குமரேசன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில்,' மீன்பிடி வேலைக்காக துபாய் சென்ற தனக்கு போதிய வருமானம் இல்லை. அதனால், அங்கு குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி, அதனை தமிழகத்திற்கு கடத்தி வந்து விற்பனை செய்துவந்தேன். இந்நிலையில் கடலுார் மாவட்டம் தே.புடையூரை சேர்ந்த பாலையா என்பவருடன் சமீபத்தில் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் சேர்ந்து தங்கம் கடத்திவந்து விற்பனை செய்ய திட்டமிட்டேன்.

கடந்த 14ம் தேதி பாலையாவிடம் 100 கிராம் எடை கொண்ட 3 தங்க பிஸ்கெட்டுகளை கொடுத்து, மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லும்படியும், அங்கு நான் அனுப்பும் நபர்களிடம் கொடுக்கும்படி கூறினேன். ஆனால் விமான நிலையத்தில் நான் அனுப்பிய ஆட்களிடம் பிஸ்கெட்டுகளை கொடுக்காமல் பாலையா ஏமாற்றி விட்டார்.

அதனால் அதனை வாங்கி செல்வதற்காக வந்த நாங்கள், தங்க பிஸ்கெட்டுகளை ராணியிடம் இருந்து பறித்து, விற்பனை செய்வதற்காக இப்ராஹிம் உள்ளிட்டோரிடம் கொடுத்து அனுப்பினேன். அதன் பிறகு பாலையாவை தேடிக் கொண்டிருந்த போதுதான் போலீசில் சிக்கிக் கொண்டோம்' என, தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X