பைனான்சியரிடம் ரூ. 41 லட்சம் மோசடி; திண்டிவனத்தில் மளிகைக் கடைக்காரர் கைது

Added : ஆக 18, 2022 | |
Advertisement
விழுப்புரம் : திண்டிவனத்தில் பைனான்சியரிடம் மாத வட்டிக்கு 41 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றிய மளிகைக் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், நேருவீதியைச் சேர்ந்தவர் தணிகைவேல், 40; பைனான்சியர். இவர், தனது கடைக்கு அருகே சென்டர் மளிகை ஸ்டோர் நடத்தி வருபவர் அபுபக்கர், 43; இவர், தணிகைவேலிடம் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் 2019ம் ஆண்டு நவம்பர் 14ம்

விழுப்புரம் : திண்டிவனத்தில் பைனான்சியரிடம் மாத வட்டிக்கு 41 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றிய மளிகைக் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், நேருவீதியைச் சேர்ந்தவர் தணிகைவேல், 40; பைனான்சியர். இவர், தனது கடைக்கு அருகே சென்டர் மளிகை ஸ்டோர் நடத்தி வருபவர் அபுபக்கர், 43; இவர், தணிகைவேலிடம் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் 2019ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி வரை 5 தவணைகளாக 18 லட்சம் ரூபாய் மாத வட்டிக்கு வாங்கியுள்ளார். பணத்திற்கான வட்டியும் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், அபுபக்கர் தனது மைனர் மகன் பெயரில் உள்ள காலி மனையை நீதிமன்ற அனுமதியின்றி தனது மனைவி அலிமாபானுவுடன் சேர்ந்து தணிகைவேலிடம் விற்க விலை பேசினர். 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்து, முன் பணமாக கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 10 லட்சமும், ஜூலை மாதம் 10 லட்சமும் பெற்றுள்ளனர்.

தணிகைவேலிடம் பணம் பெற்றுக் கொண்டதற்கு ஆவணமாக திண்டிவனம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கிரய பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார். இதுதவிர தின தண்டல் முறையில் 3 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.இதற்கிடையே மைனர் பெயரில் உள்ள சொத்தை தனது பெயருக்கு கிரயம் செய்து ஏமாற்றியிருப்பது தணிகைவேலுக்கு தெரியவந்ததும். இதுகுறித்து கேட்டுள்ளார்.மேலும் தன்னிடம் வாங்கிய மொத்தம் 41 லட்சம் ரூபாயை திருப்பித் தரும்படி அபுபக்கர் மற்றும் அவரது மனைவி அலிமா பானுவிடம் கேட்டுள்ளார்,.

பணத்தைத் தர மறுத்து, தணிகைவேலை கூலிப்படை வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளனர்.இது குறித்து தணிகைவேல் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அபுபக்கர், அலிமாபானு ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த ஜூன் 2ம் தேதி வழக்குப் பதிந்தனர்.ஆனால், அபுபக்கர் உடல்நிலை சரியில்லாததால், போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. 2 மாதங்கள் கழித்து நேற்று அபுபக்கரை போலீசார் கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X