கட்டட அனுமதி பெற ஒற்றைசாளர முறை எப்போது?

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை : தாமதங்களை குறைத்து, பொது மக்களுக்கு விரைவாக கட்டட அனுமதி கிடைக்க, ஒற்றைசாளர முறையில், 'ஆன்லைன்' வாயிலாக திட்ட அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக டி.டி.சி.பி.,யில், இத்திட்டத்தை துவங்க, தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக, onlineppa.tn.gov.in என்ற, புதிய இணையதளம்
கட்டட அனுமதி பெற ஒற்றைசாளர முறை எப்போது?

சென்னை : தாமதங்களை குறைத்து, பொது மக்களுக்கு விரைவாக கட்டட அனுமதி கிடைக்க, ஒற்றைசாளர முறையில், 'ஆன்லைன்' வாயிலாக திட்ட அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக டி.டி.சி.பி.,யில், இத்திட்டத்தை துவங்க, தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக, onlineppa.tn.gov.in என்ற, புதிய இணையதளம் ஏற்படுத்தப்பட்டது.நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: புதிய இணையதளத்தில் உள்ள தொழில்நுட்ப குளறுபடியால், அது செயல்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஒற்றைசாளர முறையில் விண்ணப்பங்களை பதிய முடியாமல், மக்கள் தவிக்கின்றனர்.இதனால், பழைய முறையில் விண்ணப்பித்து கட்டட அனுமதிக்கு, ஆறு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அரசு தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kutti Ravi - coimbatore,ரூவான்டா
18-ஆக-202218:19:51 IST Report Abuse
Kutti Ravi அதானே யாரு சட்டம் போட்டாலும் அதிகாரிகள் அதை நடைமுறைப்படுத்த காலம் ஆகும். அப்படியே ஆனாலும் மறுபடியும் தினமும் தொழில் நுட்ப கோளாறு வரும்.
Rate this:
Cancel
haridoss jennathan - VELLORE,இந்தியா
18-ஆக-202210:31:41 IST Report Abuse
haridoss jennathan கருப்பின் கேன் பெ அவிடேட் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X