புதுச்சேரி : அரியாங்குப்பம், பாரதி நகர் குடியிருப்போர் நல்வாழ்வு சங்க பெயர்பலகை திறப்பு விழா நடைபெற்றது.
சங்க பெயர்ப் பலகையை, தட்சிணாமூர்த்தி எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். இந்த சங்கத்தின் சிறப்பு தலைவராக கோபாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். தலைவராக சக்திவேல், செயலாளர் சக்கரவர்த்தி, பொருளாளர் சசிகலா, துணை தலைவர்கள் சிவக்குமார், வில்லியம் டெனிஷ், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் யுவராஜன் ஆகியோர்தேர்வாகினர்.மேலும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.