இல்லம் தேடி கல்வி திட்டம்; ஊக்கத்தொகை நிறுத்தம்

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
தமிழகத்தில், 'இல்லம் தேடி கல்வி திட்டம்' தன்னார்வலர்களுக்கு, மே முதல் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலால், இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு, 'ஆன்லைனில்' பாடங்கள் நடத்தப்பட்டன. இதனால் பல குழந்தைகளுக்கு கற்றல் திறன் பாதிக்கப்பட்டது.அந்த குறைபாட்டை களையும் பொருட்டு, 2021 அக்டோபரில், இல்லம் தேடி கல்வி திட்டத்தை, அரசு அறிமுகம்
இல்லம் தேடி கல்வி,  ஊக்கத்தொகை, தன்னார்வலர்கள், Illam thedi kalvi, thannaarvalargal,

தமிழகத்தில், 'இல்லம் தேடி கல்வி திட்டம்' தன்னார்வலர்களுக்கு, மே முதல் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலால், இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு, 'ஆன்லைனில்' பாடங்கள் நடத்தப்பட்டன. இதனால் பல குழந்தைகளுக்கு கற்றல் திறன் பாதிக்கப்பட்டது.அந்த குறைபாட்டை களையும் பொருட்டு, 2021 அக்டோபரில், இல்லம் தேடி கல்வி திட்டத்தை, அரசு அறிமுகம்

செய்தது.இதன் வாயிலாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வீடு தேடி சென்று தன்னார்வலர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். இதற்காக மாநில அளவில், 11 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இந்த ஊக்கத்தொகை, மே மாதத்தில் இருந்து தன்னார்வலர்களுக்கு வழங்கப்படவில்லை.தன்னார்வலர்கள் கூறியதாவது:சேவை நோக்கில் தான் இப்பணியை செய்கிறோம். இருந்தாலும், அரசு உறுதியளித்த ஊக்கத் தொகையை, மே மாதத்தில் இருந்து வழங்கவில்லை. அவற்றை குறித்த காலத்தில் வழங்காமல் தாமதம் செய்வது நியாயமல்ல.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
18-ஆக-202212:11:59 IST Report Abuse
raja தலைப்பு "டாஸ்மாக் தேடி கல்வி "....என்று இருக்கவேண்டும் அவனுவோ அங்கத்தானே போனானுவோ.. படத்துடன் செய்தி வந்ததே......
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
18-ஆக-202210:08:22 IST Report Abuse
duruvasar மகேஷ் பொய்யாமொழி பொழப்பே காத்து ஆடிகிட்டு இருக்கு. அவரு எங்கங்க இப்போ இந்த பக்கம் திரும்பப்போகிறார்.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
19-ஆக-202200:55:37 IST Report Abuse
madhavan rajanபொய்யாமொழி சொல்வதெல்லாம் பொய்யா? ஓட்டுப்போட்டு நீ முழி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X