இதுபோன்ற அறிக்கைகள் வாயிலாக, அரசு ஊழியர்களின் ஆதரவு கிடைச்சிடும்னு அப்பாவித்தனமா நம்புறீங்களோ?

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை:தி.மு.க.,வினர், தமிழக அரசு ஊழியர்களையும், ஓய்வூதியதாரர்களையும் ஏமாற்றுவதை விட்டுவிட்டு, கடந்த சட்டசபை தேர்தலின்போது, தேர்தல் அறிக்கையில் சொன்னதை உடனே நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து, பணம் பெறும் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை, ஜன., 1 முன்தேதியிட்டு, நிலுவைத்
பேச்சு_பேட்டி_அறிக்கை, பேச்சுபேட்டிஅறிக்கை, சசிகலா , அமமுக,  திமுக,தொட்டியம் ராஜசேகர் ,  அதிமுக,  பா.ஜ., அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர், வைகைச்செல்வன் ,ரஜினி ,சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம், சிதம்பரம், அரசு ஊழியர்கள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை:

தி.மு.க.,வினர், தமிழக அரசு ஊழியர்களையும், ஓய்வூதியதாரர்களையும் ஏமாற்றுவதை விட்டுவிட்டு, கடந்த சட்டசபை தேர்தலின்போது, தேர்தல் அறிக்கையில் சொன்னதை உடனே நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து, பணம் பெறும் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை, ஜன., 1 முன்தேதியிட்டு, நிலுவைத் தொகையோடு வழங்க வேண்டும்.

இதுபோன்ற அறிக்கைகள் வாயிலாக, அரசு ஊழியர்களின் ஆதரவு கிடைச்சிடும்னு அப்பாவித்தனமா நம்புறீங்களோ?

சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேட்டி:

பா.ஜ., தலைவர் அண்ணாமலை பணியில் இருந்து விலகிய பின், ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதில் சவாரி செய்யலாம் என்று இருந்தார். கடைசி நேரத்தில் பாஜ.,வில் சேர்ந்தார். சித்தாந்தத்தை பற்றி குறிப்பிடும் அண்ணாமலை, எந்த சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு பா.ஜ.,வில் இணைந்தார் என்பதை விளக்க வேண்டும்.


latest tamil newsரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால், தங்களது தந்தையே அந்த கட்சியில் முக்கிய பதவியில் அமர்ந்திருக்கலாம்... யார் கண்டது?

மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மாநில செயலர் பொன்னுசாமி அறிக்கை:

ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை, தமிழக அரசு கடைசியாக 2013ல் நிர்ணயம் செய்தது. அதன்பின் பெட்ரோல், டீசல், காஸ் உள்ளிட்டவை விலையும், ஆட்டோக்களுக்கான காப்பீட்டுத் தொகையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது; ஆனாலும், ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படவில்லை.

தமிழகத்தில் எத்தனை ஆட்டோக்கள், மீட்டர் போட்டு ஓடுகிறது என்பதை விரல் விட்டு எண்ணி விடலாமே!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அறிக்கை:

தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் மீது செருப்பை வீசியது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திரா மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது தி.மு.க.,வினர் என்பதை மறக்க முடியாது.


latest tamil news


தி.மு.க.,வுடன், பா.ஜ.,வையும் சேர்த்து எதிர்க்கிற, 'மூடு'க்கு வந்துட்ட மாதிரி தெரியுதே!

அ.ம.மு.க.,வில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ., தொட்டியம் ராஜசேகர் பேச்சு:

கடந்த சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்திருந்தால் தி.மு.க., ஆட்சிக்கு வந்திருக்காது. வரும் லோக்சபா தேர்தலில் அ.ம.மு.க., இடம்பெறும் கூட்டணி தான் 40 தொகுதிகளையும் கைப்பற்றும் என்பதை அ.ம.மு.க., பொதுக்குழு கூட்டம் நிரூபித்து உள்ளது.

அ.ம.மு.க.,வுடன் கூட்டணி வைக்காம போனதால தான், 60 தொகுதியிலாவது ஜெயிச்சு எதிர்க்கட்சி வரிசையில அமர்ந்திருப்பதாக, அந்தக் கட்சியினர் ஆறுதல்பட்டுக்கிறாங்களே!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
18-ஆக-202212:52:29 IST Report Abuse
jayvee ரஜினியை கட்சி ஆரம்பிக்க நிர்பந்தப்படுத்தியதே மூப்பனாரும் சிதம்பரமும்தான் ..
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
18-ஆக-202210:23:04 IST Report Abuse
Narayanan AMMK should have avoided that election and honored AIADMK though the deference are there. They have supported to DMK . Now they speak as WASTE.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X