சேலம் எம்.பி., நிதி நிராகரிப்பு: தி.மு.க.,வில் திடீர் சலசலப்பு| Dinamalar

சேலம் எம்.பி., நிதி நிராகரிப்பு: தி.மு.க.,வில் திடீர் சலசலப்பு

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (10) | |
ஓமலுார்: தி.மு.க.,வின், சேலம் எம்.பி., நிதி, 85 லட்சம் ரூபாயை வேண்டாம் என நிராகரித்து, ஓமலுார் டவுன் பஞ்சாயத்தில், அதே கட்சியை சேர்ந்த தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனால் அக்கட்சியினர் இடையே சலசலப்பு எழுந்துள்ளது.சேலம் மாவட்டம், ஓமலுார் டவுன் பஞ்சாயத்து தலைவர் செல்வராணி, துணைத்தலைவர் புஷ்பா. இவர்கள், தி.மு.க.,வை சேர்ந்தவர்கள். இந்த டவுன்
DMK,Salem MP,Parthiban

ஓமலுார்: தி.மு.க.,வின், சேலம் எம்.பி., நிதி, 85 லட்சம் ரூபாயை வேண்டாம் என நிராகரித்து, ஓமலுார் டவுன் பஞ்சாயத்தில், அதே கட்சியை சேர்ந்த தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனால் அக்கட்சியினர் இடையே சலசலப்பு எழுந்துள்ளது.



சேலம் மாவட்டம், ஓமலுார் டவுன் பஞ்சாயத்து தலைவர் செல்வராணி, துணைத்தலைவர் புஷ்பா. இவர்கள், தி.மு.க.,வை சேர்ந்தவர்கள். இந்த டவுன் பஞ்சாயத்தில் வளர்ச்சி பணிகளுக்காக, தி.மு.க.,வின், சேலம் எம்.பி., பார்த்திபன், அவரது நிதியில், 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினார். உட்கட்சி குழப்பத்தால், அந்த நிதியை புறக்கணிக்க, தி.மு.க., கவுன்சிலர்கள் முடிவு செய்தனர்.



இந்நிலையில், டவுன் பஞ்சாயத்தில் நேற்று அவசர கூட்டம் நடந்தது. 12 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். செல்வராணி தலைமை வகித்தார். தி.மு.க., - எம்.பி., நிதி ஒதுக்க திட்டமிட்டிருந்த பணிகள் எதுவும் தேவையில்லை என, தீர்மானம் நிறைவேற்றினர். மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட, 'ஈகோ' பிரச்னையில், எம்.பி., நிதி புறக்கணிக்கப்பட்டதாக, தி.மு.க.,வினர் கூறினர்.



latest tamil news


இதுகுறித்து, எம்.பி., பார்த்திபன் கூறுகையில், ''எம்.பி.,யான எனக்கு பெயர் கிடைக்கக்கூடாது என நினைக்கின்றனர். ஓமலுார் மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

''எதிர்க்கட்சியாக இருந்தபோதும் வேலை செய்ய விடவில்லை. ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் அதே நிலை,'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X