ஒடிசாவில் வெள்ளம்; 10 மாவட்டங்களில் 2.5 லட்சம் பேர் பாதிப்பு

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | |
Advertisement
புதுடில்லி: ஒடிசாவில் பெய்த கனமழை காரணமாக, மகாநதியின் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் ஆற்றின் கரையோரங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் 10 மாவட்டங்களில் உள்ள 1,400 கிராமங்களில் வசிக்கும் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக மாநில பேரிடர் சிறப்பு கமிஷனர் கூறுகையில், மகாநதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 24 ஆயிரம் ஹெக்டேர் விவசாய
Odisha, floods, people, districts, affected,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஒடிசாவில் பெய்த கனமழை காரணமாக, மகாநதியின் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் ஆற்றின் கரையோரங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் 10 மாவட்டங்களில் உள்ள 1,400 கிராமங்களில் வசிக்கும் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இது தொடர்பாக மாநில பேரிடர் சிறப்பு கமிஷனர் கூறுகையில், மகாநதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 24 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஹிராகுத் அணையில் உள்ள 64 மதகுகளில், 40 திறக்கப்பட்டுள்ளது. சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மீட்பு பணிக்காக மாநில பேரிடர் படையின் 18 குழுவினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 44 குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.



latest tamil news




வெள்ள பாதிப்பு

கட்டாக் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அங்கு சிக்கி தவித்த 700 பேர் மீட்கப்பட்டுள்ளனர். புரி, கெந்த்ரபரா, ஜகத்சிங்புர், குர்தா, கட்டாக், பவுத், சுபர்நபுர், சம்பல்புர் மாவட்டங்கள் வெள்ளம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு மேலே வெள்ளம் செல்கிறது.



latest tamil news


கிராமங்கள், விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



காற்றழுத்த தாழ்வு


அதிகாரிகள் கூறுகையில், வரும் 19 ம் தேதி ஒடிசா கடற்கரையோரம் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால், சூழ்நிலை மேலும் மோசமாகும் வாய்ப்பு உள்ளது என்றனர்.



விடுமுறை

ஜகத்சிங்புர், கேந்திரபாரா மற்றும் நயாகர்க் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கட்டாக், புரி, ஜகத்சிங்புர், கேந்திரபாரா, நயாகார்க், குர்தா, அங்குல், பவுத், சோனேபுர் மற்றும் சம்பல்புர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X