கசப்புகளை தூக்கி எறிந்துவிட்டு வாருங்கள்: ‛‛அன்பு சகோதரர் பழனிசாமி'' எனக் கூறி பன்னீர்செல்வம் அழைப்பு

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (35) | |
Advertisement
சென்னை: முந்தைய அனைத்து கசப்புகளையும் மறந்து, தூக்கி எறிந்துவிட்டு அதிமுக.,வின் ஒற்றுமையே முக்கியம் என அனைவரும் ஒன்றுபட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அன்பு சகோதரர் பழனிசாமியும், தானும் இணைந்து ஒற்றுமையாக சிறப்பான பணிகளை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் பழனிசாமி நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது
ADMK, OPS, OPanneerselvam, Invite, EPS, Palanisamy, ADMK Unite, அதிமுக, ஓபிஎஸ், பன்னீர்செல்வம், இபிஎஸ், பழனிசாமி, அழைப்பு, ஒற்றுமை, அன்பு சகோதரர், சசிகலா, டிடிவி தினகரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: முந்தைய அனைத்து கசப்புகளையும் மறந்து, தூக்கி எறிந்துவிட்டு அதிமுக.,வின் ஒற்றுமையே முக்கியம் என அனைவரும் ஒன்றுபட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அன்பு சகோதரர் பழனிசாமியும், தானும் இணைந்து ஒற்றுமையாக சிறப்பான பணிகளை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் பழனிசாமி நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், பழைய நிலையே தொடர வேண்டும் என்றும், பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. இந்த தீர்ப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் கூறியதாவது:
எங்களுக்குள் இருக்கின்ற கருத்து வேறுபாடுகளால், முந்தைய காலங்களில், திமுக ஆட்சியை பிடிக்கும் சூழல் இருந்தது. இந்த கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால், அதிமுக.,வில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.


latest tamil news

அன்பு சகோதரர்


இதற்கு முந்தைய அனைத்து கசப்புகளையும் மறந்து, தூக்கி எறிந்துவிட்டு அதிமுக.,வின் ஒற்றுமையே முக்கியம் என அனைவரும் ஒன்றுபட வேண்டும். மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என அனைவரும் இணைந்து செயல்பட வரவேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பரவாயில்லை. அன்பு சகோதரர் பழனிசாமியும் நானும் இணைந்து ஒற்றுமையாக சிறப்பான பணிகளை செய்தோம். அந்த நிலை மீண்டும் வர வேண்டும். இது இரட்டை தலைமையா என்ற பிரச்னை கிடையாது, கூட்டுத்தலைமையாக இருக்க வேண்டும்.


latest tamil news
சசிகலா


ஜனநாயக ரீதியில் ஆளுங்கட்சிக்கு உரிய எதிர்கட்சியாக மக்கள் விரோத போக்கை எதிர்த்து குரல்கொடுக்கும் முதல்கட்சியாக அதிமுக உள்ளது. கடந்தாண்டு டிசம்பரில் முறைப்படி தேர்தல் நடைபெற்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக நானும், அன்பு சகோதரர் பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஒருங்கிணைப்பாளர்கள் அதிமுக தொண்டர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது விதி. எங்களுடைய எண்ணம், செயல் எல்லாமே இணைப்பு மட்டும் தான். கட்சிக்கு உழைத்தவர்கள் யாராக இருந்தாலும், இணையலாம்; அதில் சசிகலா, டிடிவி தினகரனும் இருக்கின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு இருந்து இணைந்து உழைத்த அனைவரும் கட்சிக்கு முக்கியமானவர்களே. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
19-ஆக-202211:13:57 IST Report Abuse
Barakat Ali அதிமுக விரைவில் கரைந்துவிடும் .....
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
18-ஆக-202220:33:02 IST Report Abuse
Narayanan பன்னீர் செல்வம் அவர்களே . நீங்கள் பழனிசாமியை வரவேற்றது நன்று . அதே சமயம் சசிகலாவையும் தினகரனையும் அழைப்பது மன்னிக்கமுடியாத குற்றம் . அப்படி அவர்கள் வந்தால் உங்கள் இருவரையும் மீண்டும் குப்பைக்கூடைக்குத்தான் அனுப்புவார்கள் . மறந்துவிடாதீர்கள் . இருந்த இடம் தெரியாமல் செய்வதில் கைதேர்ந்தவர்கள் . உஷார் உஷார் உஷார்
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
18-ஆக-202216:32:13 IST Report Abuse
Rengaraj தலைமைக்கு அழகு தொண்டர்களின் அன்பை பெறுவது. அந்த தலைமை பண்பு இவரிடம் இல்லை என்று எப்படி சொல்ல முடியும்.?? இப்பொழுதும் அவர் ஒன்றிணைந்து கட்சியை நடத்த வேண்டும் என்றே சொல்கிறார். தொண்டர்களை அரவணைத்து செல்வேன் என்றும் சொல்கிறார். ஆதாயம் இல்லாமல் யாரும் எதையும் செய்ய மாட்டார்கள் அதுவும் அரசியலில் அது முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரியும். தற்காலிக பலன் நீண்டகால பலன் என்ற இரண்டையும் தொண்டர்கள் பார்க்க வேண்டும். பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். தொண்டர்களின் ஆதரவை பெற வேண்டும். கட்சி என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும் . நீயா நானா என்ற விவாதம் தேவையற்றது. ஒற்றை தலைமையோ ரெட்டை தலைமையோ தொண்டர்கள் அண்ணா தி.மு.கவுக்காக வேலை பார்க்கவேண்டும். எம்.,ஜி. ஆர் , ஜெயலலிதா இவர்கள் இமேஜ் குறையாவண்ணம் கட்சிக்கு பாடுபடவேண்டும். இந்த சமயத்தில் ஒற்றுமையே முக்கியம். அகில இந்திய அளவில் இருக்கும் பா.ஜ. க வுக்கு தலைவராக ஜே.பி. நட்டா தற்போது இருக்கிறார். அவர் இல்லாவிட்டாலும் கட்சியின் பேர் கெட போவதில்லை. அங்கே தொண்டர்கள் ஒரு தலைவருக்காக சண்டைபோடுவதில்லை. எனவே ஒற்றைத்தலைமை ரெட்டை தலைமை என்று கருதாமல் கட்சிக்காக உழைக்க வேண்டும். தொண்டர்களின் முழு அர்ப்பணிப்பு இல்லாததால்தான் சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க தோற்றது. இந்த இரு தலைவர்கள் மட்டுமே காரணம் இல்லை. இதை தொண்டர்கள் தற்போது வரை உணரவில்லை. ஆளுமை மிக்க தலைவர் என்பவர் உருவாக்கப்படுபவர் இல்லை. புதிதாக அவதாரம் எடுப்பவரும் இல்லை. கட்சியில் இருக்கும் ஒருவரே காலத்தின் கட்டாயத்தில் அவராகவே தலைமைப்பண்புடன் உருவெடுப்பார். அப்படி பல தலைவர்களை ஒரு கட்சி காண வேண்டும் என்றால் , அதாவது நீண்டகால பலன் வேண்டும் என்றால் கூட்டு தலைமை மட்டுமே தற்போது இருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X