வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கு: கைது செய்ய கோரி சாலை மறியல்

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய கோரி சாலை மறியல் நடந்தது.மயிலாடுதுறையில் முன்விரோத தகராறில் வன்னியர் சங்கம் முன்னாள் நகர செயலாளர் கண்ணண் நள்ளிரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் கண்ணன் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக
வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கு: கைது செய்ய கோரி சாலை மறியல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய கோரி சாலை மறியல் நடந்தது.
மயிலாடுதுறையில் முன்விரோத தகராறில் வன்னியர் சங்கம் முன்னாள் நகர செயலாளர் கண்ணண் நள்ளிரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் கண்ணன் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய கோரி, வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சக்திவேல், பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில், மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இவர்களிடம், டிஎஸ்பி வசந்த ராஜ் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தனர். அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
18-ஆக-202218:48:37 IST Report Abuse
mindum vasantham Vanniyar,thevar ,pillai naa neethi kidaikkathu intha aatchila
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X