5ஜியை அமல்படுத்த தயாராகுங்கள்: தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி: 5ஜி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான கடிதத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த சேவையை அமல்படுத்த தயாராகும்படி அறிவுறுத்தி உள்ளார்.கடந்த மாதம் 5ஜி ஒதுக்கீட்டிற்கான ஏலம் நடந்தது. அதில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடோபோன், அதானி நிறுவனம் ஆகியவை பங்கேற்றன. அதன் மூலம் அரசுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வருமானம் கிடைத்தது. 5ஜியின்
Centre issues spectrum assignment letters to telecom operators, asks them to prepare for 5G launch, 5g launch in india, 5g spectrum auctions, breaking news,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: 5ஜி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான கடிதத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த சேவையை அமல்படுத்த தயாராகும்படி அறிவுறுத்தி உள்ளார்.
கடந்த மாதம் 5ஜி ஒதுக்கீட்டிற்கான ஏலம் நடந்தது. அதில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடோபோன், அதானி நிறுவனம் ஆகியவை பங்கேற்றன. அதன் மூலம் அரசுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வருமானம் கிடைத்தது. 5ஜியின் ஆரம்ப கட்ட சேவை வரும் செப்., - அக்., மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் நாட்டின் முக்கிய நகரங்களில் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

2ஜி,3ஜி, 4ஜியை விட அதிகவேகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள 5ஜி மூலம் அதிகளவு தகவல்களை, குறைந்த நேரத்தில், வேகமாக அனுப்ப முடியும். சுரங்கம், கிடங்கு மற்றும் டெலிமெடிசன் ஆகிய துறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி 5ஜி, செமிகண்க்டர் உற்பத்தி மற்றும் ஆப்டிகல் பைபர் கேபிள் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் நாட்டின் அடிமட்டங்களில் இருந்து புரட்சி ஏற்படும் எனக்கூறியிருந்தார்.


latest tamil newsஇந்நிலையில், அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கையில், 5ஜி ஒதுக்கீட்டிற்கான கடிதங்கள் வழங்கப்பட்டு விட்டன. இந்த சேவையை அறிமுகப்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயாராக வேண்டும் எனக்கூறியுள்ளார்.
5ஜி ஒதுக்கீடு மூலம், இந்த சேவையை அமல்படுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. விரைவில் இந்த சேவை அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஆக-202219:58:45 IST Report Abuse
வீரா கனிமொழி, மாறன், கார்த்திக் சிதம்பரம் சன் டிவி கலைஞர் டிவி போன்றோர் சென்ற முறை முதலில் வருவோற்கு முன்னுரிமை என்று வேண்டாதவர்களை ஏலத்தில் பங்கு பெறாமல் செய்து லெட்டர் பேட் கம்பெனிகளுக்கு ஒதுக்கீடு செய்து அதை சிலநாட்களில் வெளியே விற்று பணம் பார்த்தனர். இந்தமுறை ஓபன் டெண்டர். ED
Rate this:
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
18-ஆக-202216:58:53 IST Report Abuse
Narayanan Muthu சுருக்கமாக சொல்ல வருவது "அதாகப்பட்டது மகா ஜனங்களே அதானி அம்பானி போன்ற பாஜகவின் முதலைகளை தூக்கி விடுங்கோ என்பதுதான் செய்தி."
Rate this:
Cancel
Karthikeyan - Trichy,இந்தியா
18-ஆக-202215:44:20 IST Report Abuse
Karthikeyan குசராத்து பயலுகளுக்கு மட்டுமே இந்த சேவகத்தை செய்வான் ஒன்றிய கும்பல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X