'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் காலமானார்

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (119) | |
Advertisement
திருநெல்வேலி: பிரபல இலக்கிய பேச்சாளர் 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 79.திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நெல்லை கண்ணன், காங்கிரஸ் கட்சியில் பேச்சாளராக திகழ்ந்தார். தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர், ஆன்மிக சொற்பொழிவாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இவருக்கு கடந்த சில நாட்களாக
நெல்லை கண்ணன், காலமானார், தமிழ்க்கடல், பேச்சாளர், தமிழறிஞர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருநெல்வேலி: பிரபல இலக்கிய பேச்சாளர் 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 79.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நெல்லை கண்ணன், காங்கிரஸ் கட்சியில் பேச்சாளராக திகழ்ந்தார். தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர், ஆன்மிக சொற்பொழிவாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருநெல்வேலி டவுன் அம்மன் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த அவர் இன்று (ஆக.,18) உடல்நலக் குறைவு மற்றும் வயது முதிர்வின் காரணமாக காலமானார். ஒருவாரமாக அவர் சாப்பிட முடியாத அளவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

'தமிழ்கடல்' என அழைக்கப்பட்ட நெல்லை கண்ணன், தமிழ் மொழி மீதும், இலக்கியம் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். சிறந்த இலக்கியவாதியாக அறியப்பட்டவர் பட்டிமன்ற நடுவர், பேச்சாளர், இலக்கியவாதி என பன்முக திறமை கொண்டவர். காமராஜர் போன்ற தலைவர்களுடன் நெருக்கமாக பழக்கம் வைத்திருந்த நெல்லை கண்ணன் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியின் தீவிர பேச்சாளராக இருந்தார். குறிப்பாக காமராஜர் மீது அதிக பற்று கொண்டவர். பெரும்பாலான மேடைகளில் காமராஜரை பற்றி பேசுவார். 1996ம் ஆண்டு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார்.


latest tamil news


நெல்லை வழக்காடு மொழிக்கேற்ப தனது பேச்சில் அவன், இவன் என சாதாரணமாக தான் பேசுவார். அதனால் இவரது பேச்சு அனைவரும் ரசிக்கும்படி இருக்கும். மேலும் பொது மேடையில் சர்ச்சையாக பேசுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார். குறிப்பாக கடந்த 2020 ஜனவரி மாதம் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நெல்லையில் நடந்த கூட்டத்தில் பேசும்போது பிரதமர் மோடி அமித்ஷா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்த காரணத்தால் கைது செய்யப்பட்டார்.

அதிமுக.,விலும் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்திருந்தாலும் சமீபகாலமாக திமுக.,வுக்கு ஆதரவாகவே பொது மேடைகளில் பேசி வந்தார். சமீபத்தில், முதல்வரை சந்திக்க அனுமதிக்கவில்லை, 79 வயது கிழவன் நொந்து போயுள்ளேன், இறந்து போகலாம் என நினைக்கிறேன் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (119)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஆக-202217:30:18 IST Report Abuse
Yaro Oruvan தமிழ் நல்லா பேசுவார்.. கடைசி காலத்துல வாய வாடகைக்கு விட்டு... ம்ம் ... போய் சேந்துட்டார்.. வேறெதுவும் சொல்லப்புடாது
Rate this:
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
22-ஆக-202219:06:35 IST Report Abuse
sankar . நல்ல பேச்சளார் . மதிக்கத்தக்க மனிதராக வாழ்ந்து கடைசி காலத்தில் நிலை தடுமாறி தன் கவுரவம் இழந்தார் . ஆண்டவன் எல்லாவற்றையும் பார்க்கிறான் . அதுவும் நல்லவன் தவறு செய்தால் உடனே மண்டையில் குட்டி விடுகிறான் . அவரின் ஆன்மா நல்ல பிறப்பை அடைய அன்னை காந்திமதி அருள் புரியட்டும்
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
22-ஆக-202211:25:56 IST Report Abuse
Rasheel மூர்க்கர்ன் பைசாவிற்காக மானத்தை விற்றவன் சிலபேர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X