உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்

Updated : ஆக 19, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: உலகில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்கள் பட்டியலில், டில்லி முதலிடத்திலும், கோல்கட்டா 2வது இடத்திலும் உள்ளது.காற்றில் இருக்கும் தூசின்(பர்டிகுலேட் மேட்டர் -பிஎம்) அளவு 2.5 விட்டமாக உள்ளது. சுவாசிக்கக்கூடிய அளவுள்ள துகள்கள் 10 மைக்ரான்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதை பிஎம். 10(பிஎம்10) என அழைக்கப்படுகிறது. இது ஒரு கியூபிக் மீட்டருக்கு 20 மைக்ரோகிராம் அளவுக்கு
காற்றுமாசுபாடு,air pollution

புதுடில்லி: உலகில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்கள் பட்டியலில், டில்லி முதலிடத்திலும், கோல்கட்டா 2வது இடத்திலும் உள்ளது.

காற்றில் இருக்கும் தூசின்(பர்டிகுலேட் மேட்டர் -பிஎம்) அளவு 2.5 விட்டமாக உள்ளது. சுவாசிக்கக்கூடிய அளவுள்ள துகள்கள் 10 மைக்ரான்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதை பிஎம். 10(பிஎம்10) என அழைக்கப்படுகிறது. இது ஒரு கியூபிக் மீட்டருக்கு 20 மைக்ரோகிராம் அளவுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இந்நிலையில் ஹெல்த் எபக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் காற்று மாசுபாடு குறித்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்காக உலகம் முழுவதும் 7 ஆயிரம் நகரங்களின் காற்று மாசு அளவு சேகரிக்கப்பட்டது.


latest tamil news


இந்த பட்டியில் டில்லி முதலிடத்திலும், கோல்கட்டா 2வது இடத்திலும் உள்ளது.நைஜீரியாவின் கனோ நகரம் 3வது இடத்தில் உள்ளது. 14வது இடத்தில் மும்பை உள்ளது.4வது இடத்தில் பெருவின் லிமா, 5வது இடத்தில் வங்கதேசத்தின் டாகா, 6வது இடத்தில் இந்தோனேஷியாவன் ஜகார்த்தா, 7 வது இடத்தில் நைஜீரியாவின் லாகோஸ், 8 வது இடத்தில் பாகிஸ்தானின் கராச்சி, 9 வது இடத்தில் சீனா தலைநகர் பெய்ஜிங், 10வது இடத்தில் கானாவின் அக்ரா ஆகியன உள்ளன.

நைட்ரஜன் டை ஆக்சைடு வெளியிட்டு அளவை பொறுத்தவரையில் உலகின் சீனாவின் ஷாங்காய் நகரில் தான் அதிகமாக உள்ளது. இந்த பட்டியலில், முதல் 20 இடங்களில் இந்திய நகரங்கள் இல்லை. ஷாங்காய்க்கு அடுத்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோ உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஆக-202204:54:19 IST Report Abuse
அப்புசாமி அப்பப்ப ஒரே ஒரு குப்பையை தூக்கி குப்பைத் தொட்டியில்.போட்டு சுத்தமா வெச்சிருப்பவர் கவனிக்கணும்.
Rate this:
19-ஆக-202208:17:28 IST Report Abuse
ராஜாநீ குப்பை போடுவாய் அதை அவர் அள்ள வேண்டுமா!? இது தான் காங்கிரசால் கேடுகெட்ட இந்த நாட்டு மக்களின் மன நிலை....
Rate this:
Cancel
நல்லவன் - chennai,இந்தியா
18-ஆக-202217:52:25 IST Report Abuse
நல்லவன் /////....
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
18-ஆக-202217:21:52 IST Report Abuse
sankaranarayanan உலகில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்கள் பட்டியலில், டில்லி முதலிடத்தில் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. பல இலவசங்களை அறிவிக்கும் வால் கேஜெரி இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். துடைப்பகட்டையை தங்களது சின்னமாக வைத்துக்கொணடவர்கள் அதே துடைப்பங்களால் ஏன் தில்லி மாநகரை சுத்தம் செய்யக்கூடாது இனி ஒவ்வொரு எம்.எல். களுக்கும் அதிகமாக துடைப்பங்களை விநியோகித்து மாநகரை சுத்தமாக வைத்துக்கொள்ள சொல்லவேண்டும். இல்லயே அதையே ஆயுதமாக பிரயோகிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X