பெண்களுக்கு எதிரான குற்றவாளிகளை ஆதரிப்பதா?: ராகுல் கேள்வி

Updated : ஆக 19, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (34) | |
Advertisement
புதுடில்லி: பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளிகளை ஆதரிப்பது பெண்களிடம் பா.ஜ.,வின் அற்ப மனநிலையை காட்டுவதாக விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், இப்படிப்பட்ட அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா பிரதமரே என கேள்வி எழுப்பியுள்ளார்.கடந்த 2002ல் குஜராத்தில் பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண்ணை, வன்முறை கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அப்பெண்ணின்
Rahul, Criticize, PMModi, Congress, ராகுல், காங்கிரஸ், பிரதமர் மோடி, விமர்சனம், கேள்வி, வெட்கமில்லையா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளிகளை ஆதரிப்பது பெண்களிடம் பா.ஜ.,வின் அற்ப மனநிலையை காட்டுவதாக விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், இப்படிப்பட்ட அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா பிரதமரே என கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2002ல் குஜராத்தில் பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண்ணை, வன்முறை கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அப்பெண்ணின் குடும்பத்தினரையும் அக்கும்பல் கொன்றது. இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில் 11 பேரையும் குஜராத் அரசு கடந்த ஆக.,15ம் தேதி விடுதலை செய்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.


latest tamil news


இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியதாவது: உன்னாவ் பலாத்கார வழக்கில்- பா.ஜ., எம்எல்ஏ.,வை காப்பாற்றுவது, கதுவா சிறுமி பலாத்கார வழக்கில் பலாத்காரம் செய்தவனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கில் பலாத்காரம் செய்தவனுக்கு அரசு ஆதரவாக இருப்பது, குஜராத் பில்கிஸ் பானு வழக்கில் பலாத்காரம் செய்தவர்களை விடுதலை செய்து கொண்டாடுவது, குற்றவாளிகளை ஆதரிப்பது எல்லாம் பெண்களை குறித்த பா.ஜ.,வின் கீழ்த்தரமான எண்ணங்களையே குறிக்கிறது. இது போன்று அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா பிரதமரே?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
john - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஆக-202209:24:53 IST Report Abuse
john அவருக்கு என்னைக்கு வெட்கம் இருந்திருக்கிறது அவரை போய்க்கேள்விகேட்கிறதுக்கு
Rate this:
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
18-ஆக-202221:47:58 IST Report Abuse
மனிதன் ஏழுபேர் சேர்ந்து ஒரு அப்பாவி கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது,அந்த பெண்ணின் குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்தது இதெல்லாம் தப்பே இல்லை என்பதுபோல் கருத்து பதிகிறார்கள்... இங்கே ஒருவராவது நீதியை மட்டுமே பேசுவேன், தப்பை யார் செய்தாலும் வக்காலத்து வாங்கமாட்டேன் என இருக்கிறார்களா?? இவர்கள்தான் நீதி, நேர்மை, பாரத மாதா என்று பிதற்றுபவர்கள்....
Rate this:
19-ஆக-202206:05:06 IST Report Abuse
ராஜா,,,,...
Rate this:
19-ஆக-202206:04:57 IST Report Abuse
ராஜாசரிப்பா நீதி மன்றம் தானே விடுதலை செய்தது. ராஜிவ் கொலை செய்யப்பட்ட போது அங்கே இறந்த, பாதிக்கபட்ட பல பெண்களின் குடும்பங்கள் சில மாதங்கள் முன்பு தமிழ்நாட்டில் நீதி கேட்டதே. அப்போது உங்கள் இளவரசருக்கு காது கேட்க வில்லையா!? கொலையாளியை கட்டியணைத்து வரவேற்றார் ஸ்டாலின், கண்டித்து கூட்டணியில் இருந்து வெளியேறி இருந்தால் மானஸ்தன். நிர்பயா சம்பவமும் காங்கிரஸ் ஆட்சியில் தான் நடந்தது, எவ்வளவு பெரிய போராட்டத்துக்கு பிறகு அப்போது இருந்த காவல்துறை நடவடிக்கை எடுத்தது தெரியுமா? பாலியல் குற்ற வழக்கில் சிக்கியுள்ள காங்கிரஸ் பட்டாளமே இருக்கிறது. அவர்களை என்ன செய்தார் உங்கள் இள வரசர்? எந்த பெண்ணுக்கும் அநீதியோ, கொடுமையோ இளைக்கபட்டாலும் அது தவறு தான். அதற்காக போராட கூட செய்யலாம். ஆனால், அதை வைத்து இது போல் வெற்று அரசியல் மட்டும் செய்ய நினைப்பது அந்த குற்றத்தை விடக்கீழ்த்தரமாக உள்ளது....
Rate this:
19-ஆக-202206:05:20 IST Report Abuse
ராஜா,,,,,...
Rate this:
19-ஆக-202206:05:11 IST Report Abuse
ராஜா,,,,,...
Rate this:
Cancel
18-ஆக-202221:12:19 IST Report Abuse
ஆரூர் ரங் மதுரை கவுன்சிலர் லீலாவதி கூட அப்பாவிப் பெண் தானே? அவரைப் படுகொலை செய்த ஆட்களை தண்டனைக் காலb😙பாதியில் விடுதலை செய்த திமுக வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு இப்படி உளறலாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X