கேரளாவில் முதல் மகளிர் வங்கி கிளையை திறந்த ஹெச்.டி.எப்.சி.,

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கோழிக்கோடு : வங்கித்துறையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில், கேரளாவில் தனது முதல் மகளிர் வங்கி கிளையை ஹெச்.டி.எப்.சி துவங்கியுள்ளது. முன்னணி தனியார் வங்கியான ஹெச்.டி.எப்.சி தனது முதல் மகளிர் கிளையை கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள செரூட்டி சாலையில் திறந்துள்ளது. வங்கி கிளையை கோழிக்கோடு மாநகராட்சி மேயர் பீனா பிலிப் நேற்று திறந்து வைத்தார். புதிய
kerala,கேரளா, ஹெச்.டி.எப்.சி, HDFC Bank, First all women branch, South India,கோழிக்கோடு : வங்கித்துறையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில், கேரளாவில் தனது முதல் மகளிர் வங்கி கிளையை ஹெச்.டி.எப்.சி துவங்கியுள்ளது.முன்னணி தனியார் வங்கியான ஹெச்.டி.எப்.சி தனது முதல் மகளிர் கிளையை கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள செரூட்டி சாலையில் திறந்துள்ளது. வங்கி கிளையை கோழிக்கோடு மாநகராட்சி மேயர் பீனா பிலிப் நேற்று திறந்து வைத்தார். புதிய வங்கி கிளையில் 4 பெண்கள் பணியாற்றுகின்றனர்.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளடக்கிய வங்கியின் தென் மண்டல தலைவர், சஞ்சீவ் கூறுகையில், 'வங்கியின் பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் நடவடிக்கையின் மற்றுமொரு உதாரணமாக அனைத்து மகளிர் வங்கி கிளை துவங்கப்பட்டுள்ளது' என்றார்.


latest tamil newsவங்கியின் பன்முகத்தன்மை மற்றும் சமவாய்ப்பு கொள்கைக்கு வலு சேர்க்கும் வகையில், தென்னிந்தியாவில் முதல் அனைத்து மகளிர் கிளை துவங்கப்பட்டுள்ளதாக ஹெச்.டி.எப்.சி வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

மார்ச்.31, 2022 நிலவரப்படி, ஹெச்.டி.எப்.சி வங்கியில் 21.7 சதவீதம் பெண் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2025க்குள் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை 25 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18-ஆக-202217:30:18 IST Report Abuse
Natarajan Ramanathan செக்யூரிட்டியாக இருப்பதும் பெண்தானே?
Rate this:
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
18-ஆக-202222:15:51 IST Report Abuse
Ramesh Sargamஅநேகமாக ஆண் செக்கூரிட்டி தான் இருப்பார்....
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18-ஆக-202217:29:42 IST Report Abuse
Natarajan Ramanathan தமிழகத்தில் கனரா வங்கி சிண்டிகேட் வங்கி போன்றவை பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பே மகளிர் கிளைகள் திறந்தன.ஆனால் போணியாகவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X