கடற்கரையில் ஆயுதங்களுடன் ஒதுங்கிய மர்ம படகு: மஹா., வில் பாதுகாப்பு தீவிரம்

Updated : ஆக 19, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
ராய்காட்: மஹாராஷ்டிராவின் ராய்காட் பகுதியில் ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் படகு கரை ஒதுங்கியது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில், ஹரிஹரேஸ்வரர் கடற்கரை அருகே மர்ம படகு ஒன்று ஒதுங்கியது. அந்த படகில் யாரும் இல்லை. இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படை மற்றும் மஹாராஷ்டிரா கடற்கரை பாதுகாப்பு குழுவினர் படகை
maharastra, raigad, boat, ak47, weapons,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராய்காட்: மஹாராஷ்டிராவின் ராய்காட் பகுதியில் ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் படகு கரை ஒதுங்கியது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில், ஹரிஹரேஸ்வரர் கடற்கரை அருகே மர்ம படகு ஒன்று ஒதுங்கியது. அந்த படகில் யாரும் இல்லை. இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படை மற்றும் மஹாராஷ்டிரா கடற்கரை பாதுகாப்பு குழுவினர் படகை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் இருந்தன. அதனை கைப்பற்றிய அதிகாரிகள், படகில் வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


latest tamil newsஇது குறித்து தகவல் அறிந்த போலீசார், மாவட்டம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தி, தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கரை ஒதுங்கிய படகு ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்டதாகவும், அதில் வந்தவர்கள், கடற்கரையில் நுழைந்தது குறித்து கடலோர காவல்படையிடம் தகவல் ஏதும் கூறவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.


latest tamil newsஇந்த படகு குறித்து விசாரணை நடத்த பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி., கூறியுள்ளார்.பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் வினீத் அகர்வால் கூறுகையில், பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த படகு ஓமனில் பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது என்றார்.


latest tamil newsபோலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், இந்த படகு, கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும், நெப்டியூன் கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்தது என தெரியவருவதாக தெரிவித்துள்ளன.
படகு கரை ஒதுங்கிய இடம் மும்பையில் இருந்து 200 கி.மீ., தொலைவிலும், புனேயில் இருந்து 170 கி.மீ., தொலைவிலும் உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
18-ஆக-202219:49:34 IST Report Abuse
MARUTHU PANDIAR ஓமனில் பதிவு செஞ்ச படகாம்+++++++ஓமனில்சவூதியை ஒட்டியுள்ள அது என்ன நாடு தெரியுமோ -சரி++++அப்போ அதுல யாரு வந்துருக்க வாய்ப்பு இருக்கு? யோசிங்க மக்களே.
Rate this:
Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
19-ஆக-202202:57:22 IST Report Abuse
Watcha Mohideenஆமா சீனாக்காரன்18km இந்திய எக்லலைக்குள் வந்து கண்காணிப்பு கோபுரம் கட்டுறான், இப்ப இந்த படகிலே யாரு வந்துருக்க வாய்ப்பு இருக்கு? யோசிங்க மக்களே. நல்ல யோசிங்க...
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
18-ஆக-202217:49:14 IST Report Abuse
Ramesh Sargam சீனாவின் சதி செயலாக இருக்கும். அல்லது பாக்கிஸ்தான் சதி செயலாக கூட இருக்கலாம். அல்லது இரண்டு நாடுகளும் சேர்ந்து கூட்டுச்சதி செய்திருக்கலாம். எதற்கும், நமது வீரர்கள் கடலோரப்பகுதிகளில் அதிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
18-ஆக-202217:40:55 IST Report Abuse
NicoleThomson அந்த படகில் வந்தவர்கள் யாருக்கும் எதுவும் ஆகியிருக்காது என்று நம்புவோம்
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
19-ஆக-202208:42:00 IST Report Abuse
suresh kumarஅவர்களால் நம் நாட்டுக்கு எந்த ஆபத்தும் வராமலிருந்தால் சரிதான்...
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
19-ஆக-202208:43:44 IST Report Abuse
suresh kumar//அதில் வந்தவர்கள், கடற்கரையில் நுழைந்தது குறித்து கடலோர காவல்படையிடம் தகவல் ஏதும் கூறவில்லை ..// நம்ம ஊர் திருடங்களா - போலீஸ்கிட்டே சொல்லிட்டு வறதுக்கு?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X