அன்பு சகோதரர் இபிஎஸ் - சொன்னது ஓபிஎஸ் : அண்ணன் ஓபிஎஸ் - சொன்னது இபிஎஸ்

Updated : ஆக 19, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை: அதிமுக.,வில் ஒற்றை தலைமை பிரச்னை வெடித்ததில் இருந்தே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு இடையே பனிப்போர் அதிகமானது. ஜூன் 23 பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை காலி செய்து, ஒற்றை தலைமைக்கு ஏற்றார்போல் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவர பழனிசாமி முயற்சித்ததால், அதனை முறியடிக்கும்விதமாக நீதிமன்றம் சென்றார் ஓபிஎஸ். ஆனால், யாரும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: அதிமுக.,வில் ஒற்றை தலைமை பிரச்னை வெடித்ததில் இருந்தே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு இடையே பனிப்போர் அதிகமானது. ஜூன் 23 பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை காலி செய்து, ஒற்றை தலைமைக்கு ஏற்றார்போல் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவர பழனிசாமி முயற்சித்ததால், அதனை முறியடிக்கும்விதமாக நீதிமன்றம் சென்றார் ஓபிஎஸ். ஆனால், யாரும் எதிர்பார்க்காத நிலையில், ஜூன் 23 பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாகவும், ஒற்றை தலைமை குறித்து ஜூலை 11ல் நடக்கும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவைத் தலைவர் அறிவித்தார்.



latest tamil news


ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்கேற்காமல் புறக்கணித்த நிலையில், பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலராக தேர்ந்தெடுத்து அறிவித்தனர். மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து இபிஎஸ் நீக்கினார். பொதுக்குழுவுக்கு எதிராக மீண்டும் நீதிமன்றத்தை ஓபிஎஸ் நாடினார். இதில் ஜூன் 23க்கு முன்பு இருந்த நிலையே தொடரும் என நீதிபதி தீர்ப்பளித்ததால், இடைக்கால பொதுச்செயலாளர் பதவி இல்லாமல், மீண்டும் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் தொடர்கின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் இன்று மேல்முறையீடு செய்துள்ளார்.


latest tamil news


இது ஒருபுறம் இருக்க, ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓபிஎஸ், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என இபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடுத்தார். அப்போது, இபிஎஸ்.,சை குறிப்பிடும்போது ஓரிருமுறை 'அன்பு சகோதரர்' எனக் குறிப்பிட்டு பேசினார். அதேபோல், மீண்டும் இணையப் போவது இல்லை எனக் கூறி விளக்கமளித்த இபிஎஸ், தான் பேசுகையில் 'அண்ணன் ஓபிஎஸ்' எனக் குறிப்பிட்டார். இருவரும் மாறிமாறி சகோதரத்துவத்துடன் குறிப்பிட்டு பேச்சில் மட்டுமே சகோதர பாசத்தை வெளிப்படுத்தினாலும், இந்த சகோதர பாசம் இருவரை இணைப்பதில் வேலை செய்யவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
19-ஆக-202206:16:47 IST Report Abuse
Mani . V இதெல்லாம் ஒரு பிழைப்பு.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
19-ஆக-202202:01:06 IST Report Abuse
BASKAR TETCHANA அவர் அன்பு சகோதரர் என்று கூப்பிட்டார் இவர் அன்பு அன்னான் என்று கூப்பி அப்படி என்றால் பன்னிரு மூத்தவர் பழனி இளையவர். மூத்தவர் சொல்வதை கேட்டு இளையவர் விட்டு கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
19-ஆக-202201:13:47 IST Report Abuse
அன்பு அண்னே அண்னே சுப்பாய் அண்னே, குனிஞ்சா குத்திப்புடுவாருணனே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X