இலவசங்கள் என்பதும் ஒரு வகையான லஞ்சம் தான்: சீமான் விமர்சனம்

Updated : ஆக 19, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (34) | |
Advertisement
திருச்சி: இலவசங்கள் என்பதும் ஒரு வகையான லஞ்சம்தான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இலவசங்கள் கொடுப்பதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக
Seeman, PTRPalanivelThiagarajan, Freebies, NTK, PTR, சீமான், பழனிவேல் தியாகராஜன், பிடிஆர், இலவசங்கள், லஞ்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருச்சி: இலவசங்கள் என்பதும் ஒரு வகையான லஞ்சம்தான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இலவசங்கள் கொடுப்பதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நன்கு படித்தவர். அவர் மனசாட்சியோடு பேச வேண்டும். இலவசங்களால் நாடு வளர்ந்திருக்கிறது என அவரால் நிரூபிக்க முடியுமா? இலவசங்களால் இழக்கும் பணத்தை எங்கிருந்து எடுக்கிறீர்கள்?

இந்தியாவிற்கு 100 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது, தமிழகத்திற்கு 6.5 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. பிறகு எதற்கு இப்படியான இனிப்பான வெற்று அறிவிப்புகளை கொடுக்கிறீர்கள். தேசத்தை நாசமாக்கும் ஒரே சொல் இலவசம். இதனை எப்படி எடுத்துக்கொண்டாலும் ஒரு வகையான லஞ்சம்தான். அத்தியாவசிய தேவையான கிரைண்டர், மிக்சி, லேப்டாப், மின்விசிறி, டிவி போன்றவை தன் சொந்த வருமானத்தில் வாங்க வேண்டிய ஒன்று. இந்த அடிப்படை தேவைகளையே நிறைவேற்ற முடியாத ஏழ்மை நிலைக்கு வைத்ததை எப்படி சாதனையாக சொல்ல முடியும்.


latest tamil news


முதலில் ரேஷனில் ரூ.2க்கு அரிசி கொடுத்தீர்கள், பிறகு ரூ.1க்கு கொடுத்தீர்கள், இப்போது இலவசமாக கொடுக்கிறீர்கள். இப்படியே இலவசமாக எத்தனை ஆண்டுகள் கொடுப்பீர்கள்? எனவே பொருளாதாரம் படித்த, உலக அரசியலை கற்றவர் இப்படி பேசக்கூடாது. இலவசம் என்பது மோசமான திட்டம், இதனால் நாடு ஒரு புள்ளி அளவிற்கு கூட வளராது. விவசாயிகள் தான் நாட்டிற்கு கொடுக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கிறார்கள். ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை கொடுப்பது துயரமான மற்றும் அவமானமான செயல், இதில் பெருமைப்பட ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahalingam Laxman - Chapel Hill,யூ.எஸ்.ஏ
20-ஆக-202213:09:06 IST Report Abuse
Mahalingam Laxman நான் முழுக்க முழுக்க சீமான் சொன்னதை ஆதரிக்கிரேன். ஒருபடி மேலே சென்று ஒருமாதிரி லன்சம் இல்லை. நூற்று ஒன்று சதவீதம் லஞ்சம். அறிவித்த கட்சியை தேர்தலிருந்து நீக்குக சட்டம் வர வேண்டும். யாரும் இதற்கு புகார் கொடுக்க தேவையில்லை. தனி வேட்பாளர் அறிவித்தால் அவர் இனிமேல் தேர்தலுக்கு நிற்க முடியாத ஒரு சட்டம் வர வேண்டும்.
Rate this:
Cancel
19-ஆக-202207:08:07 IST Report Abuse
N Sasikumar Yadhav விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் இலவச மின்சாரம் சட்ட விரோதமாக பயன்படுகிறது. இலவச பொருட்களால் ஆட்சியாளர்கள் குறிப்பிட்ட சதவீதம் லஞ்சமாக வாங்குகிறார்கள்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
19-ஆக-202200:02:40 IST Report Abuse
Vena Suna சீமான் தான் அடுத்த முதல்வர். திமுகவை ஒதுக்குவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X