கல்லூரி மாணவனுக்கு தலையில் வெட்டு வழக்கு: 3 பேர் கைது| Dinamalar

கல்லூரி மாணவனுக்கு தலையில் வெட்டு வழக்கு: 3 பேர் கைது

Added : ஆக 18, 2022 | |
திருவள்ளூர்: ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவனை தலையில் கத்தியால் வெட்டிய வழக்கில் 3 பேரை போ லீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆக.,16ம் தேதி ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் இடையே ரூட் தல தொடர்பாக வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதில், பச்சையப்பன் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவன்
வெட்டு, வழக்கு,

திருவள்ளூர்: ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவனை தலையில் கத்தியால் வெட்டிய வழக்கில் 3 பேரை போ லீசார் கைது செய்தனர்.


திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆக.,16ம் தேதி ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் இடையே ரூட் தல தொடர்பாக வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதில், பச்சையப்பன் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவன் தினேஷ் தலையில் வெட்டுப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார், மோதலில் தொடர்புடைய மாநிலக் கல்லூரி மாணவர்கள் 3 பேரை இன்று(ஆக.,18) கைது செய்து சிறையில் அடைத்தனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X