இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும்: கவர்னர் ரவி| Dinamalar

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும்: கவர்னர் ரவி

Updated : ஆக 19, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (12) | |
வேலூர்: உலக அமைதிக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கவர்னர் ரவி கூறினார்.வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா இன்று (ஆக.,18) நடந்தது. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு 8,168 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- இந்தியா, அமெரிக்க நட்புறவு நீண்ட
கவர்னர், ரவி, பட்டமளிப்பு.Governor,ஆளுநர்,கவர்னர்

வேலூர்: உலக அமைதிக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கவர்னர் ரவி கூறினார்.


latest tamil news


வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா இன்று (ஆக.,18) நடந்தது. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு 8,168 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.


நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- இந்தியா, அமெரிக்க நட்புறவு நீண்ட வரலாறு கொண்டது. 2 நாடுகளும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தற்போது ஒரு நாடு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கிறது. உலக அமைதிக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும். உலக அமைதிக்கு இந்த இரு நாடுகளின் பங்களிப்பு மிக முக்கியம். மாணவர்கள் வாழ்க்கை பயணத்தில் தொடர்ந்து வெற்றி பெற முடியாது. தோல்விகளை எதிர்கொள்ள வேண்டும்.


latest tamil news


புதிய சிந்தனைகளை ஏற்படுத்தும் மாற்றத்தை கொண்டு வரும் வகையில் சிந்தியுங்கள். இன்னும் 25 ஆண்டுகளுக்குள் இந்தியா 100வது சுதந்திர தின விழாவை கொண்டாடும்போது நாட்டின் வளர்ச்சிக்கு உங்களுடைய பங்களிப்பு அதிகம் தேவையானதாக இருக்கும்.


latest tamil news


இந்தியாவில் 400 தொழிற்சாலை இருந்தன. தற்போதைய 80 ஆயிரம் தொழிற்சாலைகளாக உயர்ந்துள்ளது.வரும் காலத்தில் மேலும் அதிகரிப்பது உங்களுடைய கையில் உள்ளது. கொரோனா பாதிப்பின் போது இந்தியா 200 கோடி தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு வழங்கியது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக பங்களிப்பு உள்ளது. இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிப்பது இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இது உலக அளவில் நம்மை திரும்பி பார்க்க செய்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X