பீஹார் அமைச்சரவை ‛‛ஹவுஸ்புல்'': அதிருப்தியில் நிதிஷ் கட்சி எம்எல்ஏ.,க்கள்

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
பாட்னா: பீஹார் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என முதல்வர் நிதிஷ்குமார் கட்சியில் இருக்கும் சில எம்எல்ஏ.,க்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அக்கட்சி எம்எல்ஏ பீமா பாரதி, 'சில எம்எல்ஏ.,க்களுக்கு அமைச்சரவையில் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கப்படுவதாகவும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடம் வழங்கப்படவில்லை' எனவும் வெளிப்படையாக குற்றம்
Nitish Kumar, Bima Bharti, Bihar, MLA, Minister, நிதிஷ்குமார், பீமா பாரதி, அமைச்சரவை, அமைச்சர் பதவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாட்னா: பீஹார் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என முதல்வர் நிதிஷ்குமார் கட்சியில் இருக்கும் சில எம்எல்ஏ.,க்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அக்கட்சி எம்எல்ஏ பீமா பாரதி, 'சில எம்எல்ஏ.,க்களுக்கு அமைச்சரவையில் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கப்படுவதாகவும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடம் வழங்கப்படவில்லை' எனவும் வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார்.

பீஹார் மாநிலத்தில் பா.ஜ., உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வராக ரா.ஜ.த., கட்சியின் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார். இதனையடுத்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் இந்த கூட்டணியைச் சேர்ந்த 31 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ., பீமா பாரதி, 'ஒரு சில எம்எல்ஏ.,க்களுக்கு அமைச்சரவையில் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், தன்னைப் போன்ற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை' என பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.


latest tamil news


இதற்கு பதிலளித்த முதல்வர் நிதிஷ்குமார் கூறியதாவது: பீமா பாரதிக்கு 2014, 2019ல் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர் கூறிய கருத்து எனக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்க முடியாது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பீமா பாரதி பேசியிருக்கக் கூடாது. இது குறித்து அவரை நேரில் சந்தித்து பேச உள்ளேன். அவர் புரிந்துக்கொள்ளவில்லை எனில் வேறு கட்சிக்கு செல்ல விரும்பினால் செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


பீமா பாரதி மட்டுமல்லாமல் அமைச்சரவை விரிவாக்கத்தில் இடமில்லை என்ற காரணத்தினால் நிதிஷ்குமார் கட்சி எம்எல்ஏ.,க்கள் பலரும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அமைச்சரவையில் உள்ளவர்களில், 23 பேர் மீது, அதாவது, 70 சதவீதம் பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாகவும், அவர்களில் 17 பேர் மீது கடுமையான வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், எம்எல்ஏ.,க்கள் அதிருப்தி பிரச்னையால் நிதிஷ்குமாருக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஆக-202208:13:18 IST Report Abuse
ராஜா எதிர்பார்த்த ஒன்று தான். இன்னும் மூன்று மாதங்கள் தாங்குமா என்பது சந்தேகம் தான். அயோக்கிய பயலுங்களுக்கு என்னா முட்டு?
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
18-ஆக-202223:38:06 IST Report Abuse
Barakat Ali உத்தவ் தாக்கரேயின் கதிதான் நிதிஷுக்கும் .......... அதே போல நிதிஷின் கதிதான் சூட்லருக்கும் ........
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
18-ஆக-202222:12:56 IST Report Abuse
Ramesh Sargam பீஹார் அமைச்சரவை அமைக்கப்பட்டு சில தினங்களிலேயே 'அதிருப்தி' அலை அடிக்க ஆரம்பித்துவிட்டது. இனி என்ன ஆகுமோ? அந்த சந்தர்ப்பவாதி நிதிஷ் என்ன செய்வாரோ...?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X