ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி அசத்தல் வெற்றி

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | |
Advertisement
ஹராரோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தவான், சுப்மன் கில் அரைசதம் விளாச, இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் கலக்கல் வெற்றி பெற்றது.ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஹராரேயில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் லோகேஷ் ராகுல் 'பீல்டிங்' தேர்வு செய்தார். ஜிம்பாப்வே

ஹராரோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தவான், சுப்மன் கில் அரைசதம் விளாச, இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் கலக்கல் வெற்றி பெற்றது.



latest tamil news



ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஹராரேயில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் லோகேஷ் ராகுல் 'பீல்டிங்' தேர்வு செய்தார். ஜிம்பாப்வே அணி 40.3 ஓவரில் 189 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ரெஜிஸ் சகப்வா 35, ரிச்சர்டு நிகரவா 34, பிராட் ஈவன்ஸ் 33 ரன் எடுத்தனர். பவுலிங்கில் அசத்திய இந்தியாவின் தீபக் சகார், பிரசித் கிருஷ்ணா, அக்சர் படேல் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.


latest tamil news



சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷிகர் தவான், சுப்மன் கில் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஜிம்பாப்வே பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் இருவரும் அரைசதம் கடந்த வெற்றிக்கு உதவினர். இந்திய அணி 30.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 192 ரன் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவான் 81, சுப்மன் கில் 82 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகன் விருதை சுப்மன் கில் வென்றார். இரண்டாவது போட்டி வரும் ஆகஸ்ட் 20ல் ஹராரேயில் நடக்கவுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X