'பேட்டரி'யில் இயங்கும் இரண்டடுக்கு 'ஏசி' பேருந்து : மும்பையில் அறிமுகம்

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மும்பை 'ஸ்விட்ச் மொபிலிட்டி' நிறுவனம் தயாரித்த, 'பேட்டரி'யில் இயங்கும் நாட்டின் முதல் இரண்டு அடுக்கு 'ஏசி' பேருந்து, மும்பையில் இன்று (ஆக.18) அறிமுகப்படுத்தப்பட்டது.'அசோக் லேலண்ட்' நிறுவனத்தின் துணை அமைப்பான 'ஸ்விட்ச் மொபிலிட்டி' என்ற நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத 'பேட்டரி'யில் இயங்கும் இரண்டு அடுக்கு 'ஏசி' பேருந்துகளை தயாரித்து
'பேட்டரி'   இரண்டடுக்கு  'ஏசி' பேருந்து மும்பை  அறிமுகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை 'ஸ்விட்ச் மொபிலிட்டி' நிறுவனம் தயாரித்த, 'பேட்டரி'யில் இயங்கும் நாட்டின் முதல் இரண்டு அடுக்கு 'ஏசி' பேருந்து, மும்பையில் இன்று (ஆக.18) அறிமுகப்படுத்தப்பட்டது.


'அசோக் லேலண்ட்' நிறுவனத்தின் துணை அமைப்பான 'ஸ்விட்ச் மொபிலிட்டி' என்ற நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத 'பேட்டரி'யில் இயங்கும் இரண்டு அடுக்கு 'ஏசி' பேருந்துகளை தயாரித்து வருகிறது.ஐரோப்பிய நாடான பிரிட்டன் மற்றும் இந்தியாவில் இந்த பேருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலை கள் உள்ளன. இவர்கள் தயாரித்த 100 இரண்டடுக்கு ஏசி பேருந்துகள், பிரிட்டனில் பொது போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளன.


latest tamil news



இந்நிலையில், இந்த இரண்டடுக்கு பேருந்துகளை வாங்க, மஹாராஷ்டிரா வின் மும்பை போக்குவரத்து நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. பேருந்தின் அறிமுக விழா மும்பையில் நடந்தது.


ஸ்விட்ச் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி மகேஷ் பாபு கூறியதாவது:மும்பை நகரில், 200 இரண்டடுக்கு ஏசி பேருந்துக்கு போக்குவரத்துத் துறை, 'ஆர்டர்' கொடுத்து உள்ளது.
நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் 50 பேருந்துகளை ஒப்படைத்து விடுவோம். மேலும் பல நகரங்கள் இந்த பேட்டரி பேருந்தை வாங்குவதில் ஆர்வமாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 'இந்த பேட்டரி பேருந்து முழு 'சார்ஜ்' செய்தால், 250 கி.மீ., துாரம் வரை பயணிக்க கூடியது' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
19-ஆக-202209:59:26 IST Report Abuse
அசோக்ராஜ் முதலமைச்சர் ஆட்டோ டிரைவர் என்பதால் மும்பையில் போக்குவரத்தை நவீனப்படுத்த முயற்சிக்கிறார். ஹிஹ்ஹி...
Rate this:
Cancel
Neutral Umpire - Chennai ,இந்தியா
19-ஆக-202201:22:52 IST Report Abuse
Neutral Umpire சியாட்டில் நகரில் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் செப்டம்பர் மாதத்திலிருந்து இலவச பஸ் பயணம் ,,நண்பர்களை சந்திக்க ..புது இடங்களை பார்க்க ..பள்ளி கல்லூரிகள் செல்ல ..பெற்றோர்களுக்கு செலவு வைக்காமல் இருக்க .,,புது வாகனங்கள் சாலையில் செல்லாமல் இருக்க எடுக்கப்பட்ட முடிவு ..
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
18-ஆக-202220:52:09 IST Report Abuse
Soumya நாம நம்பிள் ஓட்டை ஒடசலுகளுக்கு லிப்டிக் பூசி ஓட்டுவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X