பிற மத வழிப்பாட்டு தலங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை| Dinamalar

பிற மத வழிப்பாட்டு தலங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை

Added : ஆக 18, 2022 | |
திருத்தணி:'பிற மத வழி பாட்டு தலங்கள், கல்விச்சாலைகள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் விநாயகர் சிலைகள் வைத்து வழிப்பட தடை விதிக்கப்பட்டுள்ளது' என, திருத்தணியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் டி.எஸ்.பி., விக்னேஷ் அறிவுறுத்தினார்.இம்மாதம், 31ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.இந்நிலையில், திருத்தணி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில்,

திருத்தணி:'பிற மத வழி பாட்டு தலங்கள், கல்விச்சாலைகள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் விநாயகர் சிலைகள் வைத்து வழிப்பட தடை விதிக்கப்பட்டுள்ளது' என, திருத்தணியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் டி.எஸ்.பி., விக்னேஷ் அறிவுறுத்தினார்.

இம்மாதம், 31ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.இந்நிலையில், திருத்தணி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில், விநாயகர் சிலைகள் வைத்து வழிபடும் ஏற்பாட்டாளர்களின் ஆலோசனை கூட்டம், திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ், தலைமையில் நடந்தது.

இதில், டி.எஸ்.பி., விக்னேஷ் பேசியதாவது:ரசாயன வண்ண கலவைகள் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் பயன்படுத்தக்கூடாது. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிப்பட வேண்டும்.பொது இடங்களில் வைக்கப்படும் சிலைகள், 5 நாட்களுக்குள் அனுமதித்த நீர்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும்.எளிதில் தீப்பிடிக்காத வகையில் சிமென்ட் சீட், இரும்பு தகடு போன்றவற்றால் மட்டுமே தற்காலிக பந்தல் அமைக்க வேண்டும்.

ஊர்வலத்தின் போது கூம்பு ஒலிப்பெருக்கி வைக்கக்கூடாது. பிற மதத்தினரை புண்படுத்தும் விதமான கோஷங்கள் எழுப்பக் கூடாது.விநாயகர் சிலைகள் வைக்கும் இடமானது பிற மத வழிபாட்டு தலங்கள், கல்விச்சாலைகள், மருத்துவமனைகள் அருகில் இருக்க கூடாது. ஒவ்வொரு விநாயகர் சிலையும் வைக்கப்படும் தினத்தில் இருந்து அந்தந்த சிலைக்கு 2 தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்.அரசு விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X