போதையில் பின்லாந்து பெண் பிரதமரின் அராபிக் குத்து : வீடியோ வைரல்

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
ஹெல்சிங்கி : போதை பார்ட்டியில் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட பின்லாந்து பெண் பிரதமர் சன்னா மரீன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பின்லாந்தின் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் பிரதமராக, சன்னா மரீன்(34) பதவி வகித்து வருகிறார். உலகின் மிக இளவயது பிரதமர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் சமூக
  Finland PM's Party Video Goes Viral. Mixed Reactions On Twitter

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஹெல்சிங்கி : போதை பார்ட்டியில் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட பின்லாந்து பெண் பிரதமர் சன்னா மரீன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பின்லாந்தின் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் பிரதமராக, சன்னா மரீன்(34) பதவி வகித்து வருகிறார். உலகின் மிக இளவயது பிரதமர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


latest tamil news




இந்நிலையில் சமூக வலைதளங்களான இன்டாகிராம், டுவிட்டரில் பிரதமர் சன்னா மரீன் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது நண்பர்களுடன் மது அருந்தி போதையில் குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகியுள்ளது. இதையடுத்து பிரதமர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

முன்னதாக கடந்த 2020ல் பேஷன் இதழ் ஒன்றுக்கு லோ கட் ஜாக்கெட் அணிந்தபடி போஸ் கொடுத்தார். இதனை கண்டதும், சமூக வலைதளங்களில் அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. உயரிய பதவியில் இருந்து கொண்டு இப்படி செய்வது சரியல்ல என கண்டனம் தெரிவித்தனர்.

தற்போது போதையில் குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகியுள்ளது. பிரதமர் பதவிக்கு அவமரியாதையும், களங்கத்தையும் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வரும் சன்னா மரீன் மீது அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பின்லாந்து ஊடகங்களும் விமர்சனம் செய்து வருகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Ravikumar - chennai ,இந்தியா
20-ஆக-202212:40:18 IST Report Abuse
R Ravikumar பெண்ணியம் பேசும் பெண்கள் தலைவர் ஆனால் இதுதான் நிலைமை . முன்னோக்கு பார்வையும் , பொறுப்பும் இல்லாத தலைமை மக்களை அழிக்கும் . உண்மையான தலைவனால் தூங்க முடியாது . மண்டை சூடும் , கவலையும் இருக்கும் . இவள் ஆடுகிறாள் என்றால் .. அந்த நாடு பலமில்லாமல் அதே நேரம் செழிப்புடன் இருக்கிறது என்று அர்த்தம் . கூட யார் ஆடினாலும் கூடல் தேவை என்று தான் படும் . அது ஒரு wild party . போதை மருந்து நிச்சயம் இருக்கும் . உயர்ந்தது தாழ்ந்து போகும் என்ற விதி படி ஐரோப்பா விழும் என்று நினைக்கிறேன் .
Rate this:
Cancel
afraz -  ( Posted via: Dinamalar Android App )
19-ஆக-202218:15:38 IST Report Abuse
afraz ,,,,,
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
19-ஆக-202212:26:15 IST Report Abuse
raja ,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X