புகார் பெட்டி...:திருவள்ளூர்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
மின் கம்பம் மாற்றப்படுமா?திருத்தணி அடுத்த, மேதினாபுரம் கிராமத்தில் இருந்து, சத்திரஞ்ஜெயபுரம் ஊராட்சிக்கு செல்லும் சாலையில், விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின் கம்பம் சிதலமடைந்துள்ளன. மின் கம்பத்தின் சிமென்ட் காரைகள் முழுதும் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இரும்பு கம்பிகளும் துரு பிடித்து உள்ளதால், எந்த நேரத்தில் மின் கம்பம் உடைந்து விழும் என்ற
புகார் பெட்டி...:திருவள்ளூர்

மின் கம்பம் மாற்றப்படுமா?

திருத்தணி அடுத்த, மேதினாபுரம் கிராமத்தில் இருந்து, சத்திரஞ்ஜெயபுரம் ஊராட்சிக்கு செல்லும் சாலையில், விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின் கம்பம் சிதலமடைந்துள்ளன. மின் கம்பத்தின் சிமென்ட் காரைகள் முழுதும் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இரும்பு கம்பிகளும் துரு பிடித்து உள்ளதால், எந்த நேரத்தில் மின் கம்பம் உடைந்து விழும் என்ற அச்சத்தில் விவசாயி நிலத்தில் பயிரிட்டு வருகின்றார்.மின்வாரிய அதிகாரிகள், பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆர்.ரத்தினம், சத்திரஞ்ஜெயபுரம்.

பேருந்து இயக்கப்படுமா?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து, அத்திப்பட்டு ரயில் நிலையம் வரை, தடம் எண்: '56டி' மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து சில நாட்களாக ரயில் நிலையம் அருகே வராமல், 1 கி.மீ., முன்னரே பட்டமந்திரி பகுதியில் நின்று திரும்பி விடுகிறது. இதனால் பயணியர், பேருந்து நிற்கும் இடத்திற்கு வர சிரமப்படுகின்றனர். மேற்கண்ட வழித்தட பேருந்தை, அத்திப்பட்டு ரயில் நிலையம் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ம.குணசேகரன், அத்திப்பட்டு.

குப்பை அகற்றப்படுமா?

திருத்தணி அடுத்த, வேலஞ்சேரி காலனி பேருந்து நிறுத்தம் அருகே ஊராட்சி நிர்வாகம் சார்பில் சமுதாய கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த கூடத்தில் காதணி விழா, திருமண விழா, வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகள் மற்றும் மகளிர் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் முறையாக சமுதாய கூடத்தை பராமரிக்கவில்லை.

இதனால் தற்போது குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது.மேலும், சமுதாய கூடத்தில் குப்பை உள்ளதால், சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு சிலர் தயக்கம் காட்டுகின்றனர். எனவே, சமுதாய கூடத்தில் உள்ள குப்பையை அகற்றி, துாய்மையாக வைத்திருக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- டி.செல்வம், வேலஞ்சேரி காலனி.

பழுதடைந்த வி.ஏ.ஓ., அலுவலகம்

திருவாலங்காடு ஒன்றியம், சின்னகளக்காட்டூர் கிராமத்தில், வி.ஏ.ஓ., அலுவலகம் பழுதடைந்த நிலையில் உள்ளது.தற்போது. வி.ஏ.ஓ., நியமிக்கப்படாமல் உள்ளதால், அலுவலகம் பயன்படுத்துவதில்லை. தற்போது கட்டடம் பழுதடைந்து உள்ளதை காரணம் காண்பித்து, சின்னகளக்காட்டூரை துணை கிராமமாக கவனித்து வரும் வி.ஏ.ஓ.,க்கள் இந்த கட்டடத்திற்கு வந்து பணியாற்றுவதில்லை.

இதனால், இறப்புச் சான்றிதழ், கல்வி, முதியோர் உதவித்தொகை, ஜாதி, வருமானம், இருப்பிடம், சான்றிதழ் விண்ணப்பித்து அதற்கான ஆவணங்களை 3 கி.மீ., கடந்து, பெரியகளக்காட்டூர் அல்லது ஓரத்துார் வி.ஏ.ஓ.,க்களிடம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.எனவே, மக்களின் நலன் கருதி வி.ஏ.ஓ., கட்டடத்தை சீரமைக்க வேண்டும்.

- கோ.பிரவீன்குமார், சின்னகளக்காட்டூர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X