முத்திரை தீர்வை திரும்ப பெற 4 ஆண்டுகள் வரை அவகாசம்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
சென்னை:பத்திரப் பதிவுக்காக செலுத்தப்பட்ட முத்திரை தீர்வை, பதிவு கட்டணத்தை திரும்பப் பெறும் நடைமுறைகள் குறித்து, பதிவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.பத்திரங்களை தாக்கல் செய்வோர், சொத்தின் மொத்த மதிப்பில், ஏழு சதவீதம் முத்திரை தீர்வையாகவும், நான்கு சதவீதத்தை பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும். சில சமயத்தில் முத்திரை தீர்வை மற்றும் கட்டணம் செலுத்தி பத்திரம்

சென்னை:பத்திரப் பதிவுக்காக செலுத்தப்பட்ட முத்திரை தீர்வை, பதிவு கட்டணத்தை திரும்பப் பெறும் நடைமுறைகள் குறித்து, பதிவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.
பத்திரங்களை தாக்கல் செய்வோர், சொத்தின் மொத்த மதிப்பில், ஏழு சதவீதம் முத்திரை தீர்வையாகவும், நான்கு சதவீதத்தை பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும். சில சமயத்தில் முத்திரை தீர்வை மற்றும் கட்டணம் செலுத்தி பத்திரம் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டு இருக்கும். ஆனால், கடைசி நிமிடங்களில் அதில் ஏதாவது சட்ட சிக்கல் இருப்பது தெரியவந்தால், பதிவு செய்யப்படாமல் நிராகரிக்கப்படும்.
குறைபாடுகளை சரி செய்து, அந்த பத்திரத்தை மீண்டும் பதிவுக்கு தாக்கல் செய்ய, விண்ணப்பதாரர்கள் முயற்சிப்பது வழக்கம். இதில் பதிவுக்கு பத்திரம் ஏற்கப்படாத நிலையில், அதற்காக செலுத்தப்பட்ட முத்திரை தீர்வை, பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் திரும்ப பெறலாம்.இதற்காக விண்ணப்பிக்கும் மக்களை, சார் -பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் அலைக்கழிப்பதாக புகார்கள் எழுகின்றன.
இது குறித்து, மாவட்ட பதிவாளர்களுக்கு பதிவுத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஒரு பத்திரம் பதிவு செய்யாமல் நிராகரிக்கப்படும் நிலையில், அதற்கான முத்திரை தீர்வை, பதிவு கட்டணத்தை திரும்பப் பெற, விண்ணப்பதாரர்களுக்கு உரிமை உண்டு. இதில் முத்திரை தீர்வையை, பத்திரம் நிராகரிக்கப்பட்டதில் இருந்து நான்கு ஆண்டுகளுக்குள்ளும், பதிவு கட்டணத்தை பெற, மூன்று ஆண்டுகளுக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.
முத்திரை தீர்வையை திரும்பப் பெற வரும் விண்ணப்பங்களை, மாவட்ட பதிவாளர் ஆய்வு செய்து பரிந்துரையுடன், மாவட்ட கலெக்டருக்கு அனுப்ப வேண்டும். பதிவு கட்டணத்தை பொறுத்தவரை திரும்ப அளிப்பதில், மாவட்ட பதிவாளர் உரிய ஆய்வுகளுக்கு பின் முடிவு எடுக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X