காஷ்மீரில் வெளியாட்களுக்கு ஓட்டுரிமை: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

Added : ஆக 18, 2022 | |
Advertisement
ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரில் வசிக்கும் வெளிமாநிலத்தவரும், வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அங்குள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, 2019ல் நீக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில், ஜம்மு

ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரில் வசிக்கும் வெளிமாநிலத்தவரும், வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அங்குள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, 2019ல் நீக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில், ஜம்மு - காஷ்மீர் சட்டசபையுடன் கூடியதாக அமையும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையவில்லை. அடுத்தஆண்டில் அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தொகுதி மறுவரையறை செய்யப்பட்டுள்ளது.


திருத்தம்


இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில், வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை, ஜம்மு - காஷ்மீர் தலைமை தேர்தல் அதிகாரி ஹிர்தேஷ் குமார் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டின் மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல், ஜம்மு - காஷ்மீரில் வசிக்கும் வெளிமாநிலத்தவரும், இங்கு ஓட்டளிக்க வாய்ப்பு தரப்படும். இதற்காக வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.தற்போது, 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், வெளிமாநிலத்தவர் உட்பட, 25 லட்சம் பேர் வரை தங்களுடைய பெயரைச் சேர்க்க புதிதாக விண்ணப்பிப்பர் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


அழைப்பு


இந்த அறிவிப்புக்கு, ஜம்மு - காஷ்மீரின் அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.'ஜம்மு - காஷ்மீரில் தனக்கு செல்வாக்கு இல்லாததால், வெளிமாநிலத்தவரை சேர்த்து வெற்றி பெற பா.ஜ., முயற்சிக்கிறது. ஆனால், அந்த முயற்சி பலிக்காது' என, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா, சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.
'ஜம்மு - காஷ்மீரில் தேர்தலை நடத்துவதைவிட, அதை தன் இரும்பு கரத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க பா.ஜ., விரும்புகிறது' என, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி பதிவிட்டுள்ளார்.இதற்கிடையே இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க, 24ல் அனைத்து கட்சி கூட்டத்துக்கு தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா அழைப்பு விடுத்துஉள்ளார்.

தாக்குதல் தீவிரமாகும்


ஏற்கனவே ஜம்மு - காஷ்மீரில் உள்ள வெளிமாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள், அதிகாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்படுவதற்கு, லஷ்கர் - இ - தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வெளிமாநிலத்தவர் மீதான தங்களுடைய தாக்குதல் தீவிரமாகும் என்று அவை எச்சரித்துள்ளன.




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X