போலீஸ் டைரி...: திருவள்ளூர்| Dinamalar

போலீஸ் டைரி...: திருவள்ளூர்

Added : ஆக 18, 2022 | |
டூ - வீலர் திருட்டுதிருத்தணி: ராணிப்பேட்டை மாவட்டம், அரக் கோணம் அடுத்த, அமீர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ்,25. இவர், நேற்று முன்தினம், திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, ஸ்பிளண்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தில் வந்தார். மலைக்கோவிலில் வாகனத்தை நிறுத்திவிட்டு மூலவரை தரிசித்து வந்து பார்த்த போது, இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது

டூ - வீலர் திருட்டு

திருத்தணி: ராணிப்பேட்டை மாவட்டம், அரக் கோணம் அடுத்த, அமீர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ்,25. இவர், நேற்று முன்தினம், திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, ஸ்பிளண்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தில் வந்தார். மலைக்கோவிலில் வாகனத்தை நிறுத்திவிட்டு மூலவரை தரிசித்து வந்து பார்த்த போது, இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கிணற்றில் விழுந்தவர் பலி

நகரி: சித்துார் மாவட்டம், புங்கனுார் அடுத்த, ஒன்டிமிட்டா பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர், 39. இவர், நேற்று முன்தினம், கிராமம் அருகே விவசாய கிணற்று சுவரின் மீது உட்கார்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார்.அப்போது 'குடி'போதையில் கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார். இரவு வீட்டிற்கு வராததால் மறுநாள் காலையில் அவரது உறவினர் தேடிச் சென்ற போது, கிணற்றில் இறந்து மிதந்ததை கண்டுபிடித்து மீட்டனர். புங்கனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X