காதலியை சந்திக்க பர்தாஅணிந்து சென்ற நபர் கைது | Dinamalar

காதலியை சந்திக்க 'பர்தா'அணிந்து சென்ற நபர் கைது

Added : ஆக 18, 2022 | |
ஷாஜஹான்பூர்:உத்தர பிரதேசத்தில், தன் காதலியை சந்திக்க பர்தா அணிந்து சென்ற 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஷாஜஹான்பூரைச் சேர்ந்த சையப் அலிக்கு, சமீபத்தில் வெளியூரில் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர் மெஹ்மத்பூர் கிராமத்தில் உள்ள தன் காதலியை சந்திக்க விரும்பி

ஷாஜஹான்பூர்:உத்தர பிரதேசத்தில், தன் காதலியை சந்திக்க பர்தா அணிந்து சென்ற 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஷாஜஹான்பூரைச் சேர்ந்த சையப் அலிக்கு, சமீபத்தில் வெளியூரில் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர் மெஹ்மத்பூர் கிராமத்தில் உள்ள தன் காதலியை சந்திக்க விரும்பி உள்ளார்.


ஆனால், அந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு சையப் அலி, நன்கு பரிச்சயமானவர் என்பதால், தன்னுடைய அடையாளத்தை மறைக்க அவர் பர்தா அணிந்து சென்றுள்ளார். அவருடைய நடவடிக்கைகள் உள்ளூர்வாசிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து, பர்தாவை அகற்றி சோதனையிட்டபோது, அவர் ஆண் என்பது தெரிய வந்தது.


இது குறித்த புகாரின்படி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் 'வீடியோ' எடுத்துள்ளார். அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X