அரசு பள்ளி சுற்றுச்சுவரை அலங்கரித்த தலைவர்கள் படங்கள்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
பொன்னேரி:பள்ளி சுற்wwறுச்சுவர்களில், சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்க்க, முன்னாள் மாணவர்களின் உதவியுடன் தேசத் தலைவர்களின் படங்கள் வரைந்து வைக்கப்பட்டு உள்ளதால், அது மாணவர்கள், பெற்றோர் இடையே மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.பொன்னேரி அடுத்த, காணியம்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், 217 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில், வகுப்பறைகள்
அரசு பள்ளி சுற்றுச்சுவரை அலங்கரித்த தலைவர்கள் படங்கள்

பொன்னேரி:பள்ளி சுற்wwறுச்சுவர்களில், சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்க்க, முன்னாள் மாணவர்களின் உதவியுடன் தேசத் தலைவர்களின் படங்கள் வரைந்து வைக்கப்பட்டு உள்ளதால், அது மாணவர்கள், பெற்றோர் இடையே மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.

பொன்னேரி அடுத்த, காணியம்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், 217 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில், வகுப்பறைகள் அனைத்திலும், மாணவர்களுக்கான மேஜை மற்றும் இருக்கைகள், மின் விளக்கு, மின் விசிறி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

பள்ளி வளாகம் முழுதும் மரங்களை வைத்து பராமரித்து வருகின்றனர்.பள்ளியின் சுற்றுச் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்கும் வகையில், நேரு, அப்துல்கலாம், நேதாஜி, திருவள்ளுவர், பாரதியார், அவ்வையார், அன்னை தெரசா உள்ளிட்ட தேசத் தலைவர்களின் படங்கள் வரையப்பட்டு உள்ளன.

அரசியல் கட்சிகளின் விளம்பரம், பல்வேறு வகையான சுவரொட்டிகள் என, இருந்த சுற்றுச்சுவர் தற்போது, மாணவர்களையும், பெற்றோரையும் கவரும் வகையில் தலைவர்களின் படங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.மலையப்பன் தெரிவித்ததாவது:மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன. பாதுகாப்பிற்காக விரைவில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு உள்ளோம்.

சுற்றுச்சுவர் முழுதும் தலைவர்களின் படங்கள் வரையப்பட்டு உள்ளதால், அவர்களை பற்றி படிக்கும் மாணவர்களுக்கு மனதில் எளிதாக பதிவாகிறது.இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர், சுவர்களில் படங்களை வரைந்து கொடுத்தனர். இதனால், சுவரொட்டிகள் ஒட்டுவது முற்றிலும் தவிர்க்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X