ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை:26ல் 8 பேர் மட்டுமே இருப்பதாக புலம்பல்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
மறைமலை நகர்:சிங்கப்பெருமாள் கோவில் கூட்டுறவு வங்கி கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் போதிய பணியாளர்கள் இல்லாததால், பணி சுமையில் மன அழுத்தம் ஏற்படுவதாக, ஊழியர்கள் புலம்புகின்றனர்.சிங்கப்பெருமாள் கோவில் கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில், சிங்கப்பெருமாள் கோவில், செட்டிபுண்ணியம், கொளத்துார், ஆப்பூர், தெள்ளிமேடு, மறைமலை நகர், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், 26

மறைமலை நகர்:சிங்கப்பெருமாள் கோவில் கூட்டுறவு வங்கி கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் போதிய பணியாளர்கள் இல்லாததால், பணி சுமையில் மன அழுத்தம் ஏற்படுவதாக, ஊழியர்கள் புலம்புகின்றனர்.
சிங்கப்பெருமாள் கோவில் கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில், சிங்கப்பெருமாள் கோவில், செட்டிபுண்ணியம், கொளத்துார், ஆப்பூர், தெள்ளிமேடு, மறைமலை நகர், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், 26 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன.இந்த 26 கடைகளுக்கும் சேர்த்து, எட்டு பேர் மட்டும் பொருட்களை வழங்கும் ஊழியர்களாக உள்ளனர். இதனால், பணிச்சுமை அதிகரித்து, மனதளவில் பலகீனம் அடைவதாக, ரேஷன் கடை ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத ரேஷன் கடை ஊழியர் ஒருவர் கூறியதாவது: அனைத்து கூட்டுறவு வங்கிகளின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில், பணியாட்கள் பற்றாக்குறை உள்ளது.சிங்கப்பெருமாள் கோவில் கூட்டுறவு வங்கியை பொறுத்தவரை சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர் கிளை என, இரண்டு இடங்களில் இயங்குகிறது. இதன் கட்டுப்பாட்டில் 26 கடைகள் இயங்குகின்றன.
இதில் சேந்தமங்கலம், தாசரி குன்னத்துார், சாஸ்திரம்பாக்கம் ஆகிய ரேஷன் கடைகளில் மட்டுமே 200க்கும் குறைவான குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.மற்ற கடைகளில் 800 முதல் 1,000 குடும்ப அட்டைகள் உள்ளன. மொத்தம் 26 கடைகளுக்கு எட்டு பணியாளர்களே மாறி மாறி பணியாற்றி வருவதால், பணிச்சுமை அதிகரித்து உள்ளது.
தினமும் பல தரப்பட்ட மக்களை நேரடியாக சந்திப்பதால், நாங்கள் கடைகளை சரியாக திறப்பதில்லை என, எங்களிடம் சண்டையிடுகின்றனர். எங்களுக்கு வழங்கப்பட்ட கால அட்டவணையின்படி, ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று வருகிறோம்.பணிச்சுமையில் வேலை செய்வதால், மனதளவில் பலகீனம் அடைந்து, சோர்வு ஏற்படுகிறது. தேவையான பணியாளர்களை நியமிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X